Press "Enter" to skip to content

முதல் தேர்வில் நீக்கப்பட்டதால் விரக்தி, கோபம் அடைந்தேன்: ஸ்டூவர்ட் பிராட்

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட் விரக்கியடைந்தேன், கோபம் அடைந்தேன் எனத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஜேம்ஸ் ஆண்டர்சன் உடன் ஸ்டூவர்ட் பிராட் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜேம்ஸ் ஆண்டர்சன், மார்க் வுட், ஜாஃப்ரா ஆர்சர் ஆகியோர் மட்டுமே இடம் பிடித்தனர். ஸ்டூவர்ட் பிராட்டுக்கு இடம் கிடைக்கவில்லை. இது அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது. ஸ்டூவர்ட் பிராட்டால் அணியில் இருந்து நீக்கப்பட்டதை ஜீரணிக்க முடியவில்லை.

இந்த நிலையில் ‘‘நான் மிகவும் விரக்கியடைந்தேன், கோபம் அடைந்தேன். ஏனென்றால் அணியில் இருந்து நீக்கியதை புரிந்து கொள்வது மிகவும் கடினமான முடிவு. கடந்த இரண்டு மூன்று வருடங்களாக நான் சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறேன். ஆஷஸ் வெற்றி, தென்ஆப்பிரிக்கா தொடர் வெற்றியை என்னுடைய சட்டை போன்று உணர்கிறேன்’’என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »