Press "Enter" to skip to content

சிப்லி, கிராலே அரைசதம் – 4ம் நாள் முடிவில் இங்கிலாந்து 170 ஓட்டத்தை முன்னிலை

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான சவுத்தாம்ப்டன் முதல் டெஸ்டில் சிப்லி, கிராலே ஆகியோர் அரைசதம் அடிக்க இங்கிலாந்து அணி 170 ரன்கள் முன்னிலை பெற்றது.

சவுத்தாம்ப்டன்:

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. ஜேசன் ஹோல்டர் (6), கேப்ரியல் (4) ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 204 ரன்னில் சுருண்டது.

தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 318 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. ப்ரூக்ஸ் 39 ரன்களும், ராஸ்டன் சேஸ் 47 ரன்களும், பிராத்வைட் 65 ரன்களும், விக்கெட் கீப்பர் டவ்ரிச் 61 ரன்களும் அடித்தனர்.

இங்கிலாந்து அணி சார்பில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டும், ஆண்டர்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்நிலையில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. அந்த அணியின் ரொரி பர்ன்ஸ் 42 ரன்னும்,

சிப்லி அரை சதமும், கிராலே 76 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 46 ரன்னும் எடுத்தனர்.

நான்காம் நாள் இறுதியில், இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 284 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெஸ்ட் இண்டீசை விட170 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கேப்ரியல் 3 விக்கெட்டும், சேஸ், ஜோசப் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »