Press "Enter" to skip to content

பிக் பாஷ் டி20 லீக், பெண்கள் பிக் பாஷ் போட்டி அட்டவணையை வெளியிட்டது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெறும் வகையில் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளது. டி20 உலக கோப்பையை நடத்தும் ஆர்வத்தில் ஆஸ்திரேலியா தற்போதைய சூழ்நிலையில் இல்லை. இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடர், இந்தியா டெஸ்ட் தொடரை எதிர்நோக்கி இருக்கிறது.

வீரர்கள் பயிற்சி்யை மேற்கொண்டு வந்த நிலையில், மெல்போர்ன் நகர் அமைந்துள்ள விக்டோரியா மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதனால் ஆஸ்திரேலியா உடனடியாக நாட்டின் எல்லையை திறக்க வாய்ப்பில்லை.

இந்நிலையில் 10-வது பிக் பாஷ் டி20 லீக் தொடருக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் தொடங்கும் டிசம்பர் 3-ந்தேதி பிக் பாஷ் தொடர் தொடங்குகிறது. சுமார் 60 நாட்களுக்கு மேல் நடக்கும் இந்த கிரிக்கெட் திருவிழாவின் இறுதிப் போட்டி 2021 பிப்ரவரி 6-ந்தேதி முடிவடைகிறது.

முதல் ஆடடத்தில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் – மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிகளும் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் களம் இறங்குகின்றனர்.

56 போட்டிகள் மாலை நேரத்தில் நடக்கின்றன. 8 நாட்கள் இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. அப்போது போட்டி மாலை மந்து மணிக்கு முன்னதாக தொடங்குறிது.

அதேபோல் 59 நாட்கள் நடைபெறும் பெண்களுக்கான பிக் பாஷ் டி20 லீக் தொடருன்கான போட்டி அட்டவணையையும் வெளியிட்டுள்ளது. அக்டோபர் 17-ந்தேதி தொடங்கி நவம்பர் 29-ந்தேதி முடிவடைகிறது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »