Press "Enter" to skip to content

75 பந்துகளுக்குள் அதிகமுறை சதம் அடித்து காட்டிய ஐந்து முக்கிய வீரர்கள்

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் வெறும் 75 பந்துகளுக்குள் அதிகமுறை சதம் அடித்த ஐந்து முக்கிய வீரர்கள் குறித்து பார்க்கலாம்.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சதம் அடிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. அதிலும் 100க்கும் குறைவான பந்துகளில் சதம் அடிப்பது என்பது இன்னும் கடினமான ஒரு விஷயம்.

அந்த வகையில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் வெறும் 75 பந்துகளுக்குள் அதிகமுறை சதம் அடித்த ஐந்து முக்கிய வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

அப்ரிடி உலக வரலாற்றில் இவர் ஒரு மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் ஆவார். பாகிஸ்தானை சேர்ந்தவர், பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். இவர் 398 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று ஆறு முறை சதம் அடித்துள்ளார். அதில் 4 முறை 75 பந்துகளுக்கும் குறைவான பந்துகளில் அடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரில் 36 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனையாக இருந்தது.

ஸ்ரீலங்காவின் ஓபனர் ஆன ஜெயசூர்யா கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென தனி அடையாளத்தைப் படைத்துள்ளார். இடது கை பேட்ஸ்மேனான இவர் தனது அணிக்காக பல சாதனைகளைப் புரிந்துள்ளார்.  இவர் 100க்கும் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 14 முறை சதம் அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் மிகச்சிறப்பான பங்காற்றிய இவரின் ஸ்ட்ரைக் ரேட் 90-க்கும் அதிகமாகவே இருந்தது.  சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 28 சதங்கள் அடித்துள்ள சனத் ஜெயசூர்யா அதில் ஐந்து சதங்களை 75-ற்கும் குறைவான பந்துகளில் அடித்துள்ளார்.

இந்திய வீரரான சேவாக் பவுலர்களை அச்சுறுத்தக் கூடிய வகையிலான பேட்ஸ்மேன். பவுலர்கள் பந்து போடுவதற்கு அஞ்சும் வகையில் இவரது ஆட்டம் இருக்கும்.உலக கிரிக்கெட் வரலாற்றில் பிரபலமான வீரர்களில் ஒருவரான இவர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் வேகமான மூன்று சதம் அடித்த வீரர்களில் ஒருவர். மற்றும் ஒருநாள் தொடரில் இரட்டை சதம் அடித்த சில வீரர்களில் இவரும் ஒருவர். இது போன்ற பல சாதனைகளை பெற்ற இவர் தனது சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 38 முறை சதம் அடித்துள்ளார். அதிலும் குறிப்பாக ஏழு முறை 75-ற்கும் குறைவான பந்துகளில் சதம் அடித்துள்ளார். 

தற்போதைய இங்கிலாந்து அணியின் தவிர்க்க முடியாத வீரர்களில் இவரும் ஒருவர். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சரியான வாய்ப்பு கிடைக்காததால் இதுவரை ஒரு சதம் மட்டுமே எடுத்துள்ளார். இருந்தபோதும் ஒருநாள் தொடரில் 9 சதங்கள் அடித்துள்ளார். சர்வதேச டி20 தொடரில் சதம் அடிப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறார். சர்வதேசகிரிக்கெட் தொடரில் இவர் அடித்த 10 சதங்களில் 7 சதம் 75 இற்கும் குறைவான பந்துகளில் எடுக்கப்பட்டதாகும். 

சூப்பர் மேன், மிஸ்டர் 360, போன்ற பட்டங்களுக்கு சொந்தக்காரரான டிவில்லியர்ஸ், கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் பிரபலமான வீரர். இவரின் பேட்டிங் ஸ்டைலை பார்த்து பல ஜாம்பவான்களும் வியந்து போனார்கள்.

இவரை போன்ற ஒரு வீரரை இனி உலகம் கண்டிராத அளவுக்கு இவரின் ஆட்டம் பார்ப்பவரின் மனதை கவரும் வகையில் இருக்கும். இவர் அதிவேகமான 50,100,150 ரன்களை அடித்து ஒருநாள் தொடரில் பல சாதனைகள் படைத்துள்ளார்.  சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 47 சதங்கள் அடித்துள்ள ஏ.பி டிவில்லியஸ் அதில் 9 சதங்களை 75 பந்துகளுக்குள் எடுத்து இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »