Press "Enter" to skip to content

சோதனை தொடரை வெல்வது இங்கிலாந்தா? வெஸ்ட் இண்டீஸா?: கடைசி சோதனை நாளை தொடக்கம்

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே சர்வதேச கிரிக்கெட் போட்டி 117 நாட்களுக்கு பிறகு கடந்த 8-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்கியது.

ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. 

ரசிகர்கள் இல்லாமல், கொரோனா தடுப்பு பாதுகாப்புடன் நடந்த இந்த தொடரின் முதல் டெஸ்டில் வெஸ்ட்இண்டீஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2-வது டெஸ்டில் இங்கிலாந்து 113 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராபோர்ட் மைதானத்தில் நாளை (24-ந்தேதி ) தொடங்குகிறது.

இந்த டெஸ்ட் தொடரை வெல்லப்போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. சொந்த மண்ணில் விளையாடுவதால் இங்கிலாந்திற்கு தொடரை வெல்ல அதிகமான வாய்ப்பு உள்ளது. கடந்த டெஸ்டில் 3-வது நாள் ஆட்டம் மழையால் ரத்து ஆகியிருந்தாலும் அந்த அணி வீரர்கள் சிறப்பாக ஆடி வெற்றியைப் பெற்றனர்.

 ஒருவேளை போட்டி டிராவில் முடிந்தால் டெஸ்ட் தொடர் சமநிலையில் முடியும்.

இங்கிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறது. குறிப்பாக ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அணிக்கு முதுகெலும்பாக உள்ளார். இந்த டெஸ்டிலும் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக கடந்த டெஸ்டில் நீக்கப்பட்ட ஆர்ச்சர் அணிக்கு திரும்பி இருக்கிறார். இதனால் வீரர்கள் தேர்வு  இங்கிலாந்துக்கு சவாலானது.

வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் டெஸ்டை போலவே இந்த டெஸ்டிலும் வென்று 32 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

 அந்த அணியில் பேட்டிங்கில் பிளாக்வுட், புரூக்ஸ், பிராத்வெயிட் ஆகியோரும், பந்துவீச்சில் கேப்ரியல், கேப்டன் ஹோல்டர், அல்ஜாரி ஜோசப், கேமர் ரோச் ஆகியோரும், ஆல் ரவுண்டரில் ராஸ்டன் சேஸு நல்ல நிலையில் உள்ளனர்.

இந்த டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி மாலை 3.30  மணிக்கு தொடங்கியது. சோனி சிக்ஸ் டெலிவிஷனில் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »