Press "Enter" to skip to content

ஆகஸ்ட் 2-ல் ஐபிஎல் ஆட்சி மன்றக்குழு கூட்டம்: போட்டி அட்டவணையை இறுதி செய்ய வாய்ப்பு

ஐபிஎல் ஆட்சி மன்றக்குழு கூட்டம் ஆகஸ்ட் 2-ல் நடைபெற இருப்பதாக தகவல் வெளியான நிலையில், போட்டி அட்டவணை இறுதி வடிவம் பெற இருக்கிறது.

ஐபிஎல் 2020 சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விருப்ப கடிதத்தையும் இந்திய கிரிக்கெட் போர்டு எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டுக்கு அனுப்பி விட்டது. எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டும் அதை பெற்றுவிட்டதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் ஆட்சி மன்றக்குழு கூட்டம் ஆகஸ்ட் 2-ந்தேதி நடைபெறும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தக் கூட்டத்தில் ஐபிஎல் போட்டி அட்டவணை இறுதி செய்யப்படும் என்றும், அணிகள் எழுப்பியுள்ள சில கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிசிசிஐ வட்டார தகவல்களில் ‘‘அணியின் அனைத்து உரிமையாளர்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களிடம் எல்லா விசயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும். இதுகுறித்து தற்போது கருத்து கூற இயலாது. ஆனால், கூட்டத்தில் தொடர் குறித்து அதிகமான தெளிவு கிடைக்கும். ஐபிஎல் அணிகள் சில விசயங்கள் குறித்து கேள்விகள் எழுப்பியுளு்ளன. அது குறித்து விவாதிப்போம். அதில் இருந்து முன்னோக்கிச் செல்ல கவனம் செலுத்துவோம்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலையான இயக்க நடைமுறைகளுடன் தனிமைப்படுத்துதல் நடவடிக்கை குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »