Press "Enter" to skip to content

ஹர்திக் பாண்ட்யா முதல் 10 இடத்திற்குள் வரமுடியாதது துரதிருஷ்டம்: இர்பான் பதான்

ஆல்-ரவுண்டர் வரிசையில் ஹர்திக் பாண்ட்யா முதல் 10 இடத்திற்குள் வர முடியாதது துரதிருஷ்டம் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 2-1 என கைப்பற்றியது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ்தான்.

இதனால் ஐசிசி ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முதல் இடம்பிடித்தார். பென் ஸ்டோக்ஸ் போன்ற மேட்ச் வின்னர் இந்திய அணிக்குத் தேவை. இந்திய அணி ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இதுவரை தரவரிசையில் முதல் 10 இடத்திற்குள் வராதது துரதிருஷ்டம் என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

இதுகுறி்தது இர்பான் பதான் கூறுகையில் ‘‘இங்கிலாந்துக்கு போட்டிகளை வென்று கொடுத்த வகையில் பென் ஸ்டோக்ஸ் உலகின் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டராகியுள்ளார். இதேபோன்று இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்கும் நபர் தேவை. யுவராஜ் சிங் அதுபோன்ற வீரராக திகழ்ந்தார். அணியில் ஆல்-ரவுண்டர் இருப்பது வேறு விசயம். ஆனால் முற்றிலும் டெஸ்ட் போட்டியை பற்றி நான் பேசுகிறேன்.

இந்திய அணிக்காக எந்த வடிவிலான கிரிக்கெட் போட்டியின் ஆல்-ரவுண்டர் தரவரிசையிலும் முதல் 10 இடத்திற்குள் ஹர்திக் பாண்ட்யா இல்லாதது துரதிருஷ்டவசமானது. அதற்கான ஆற்றல் அவரிடம் உள்ளது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு  வெற்றிக்கு தேடிக்கொடுக்க முடியும் என்றால், இந்த அணி வெல்ல முடியாததாக இருக்கும்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »