Press "Enter" to skip to content

‘BoycottIPL’ ஹேஸ்டேக் மூலம் ஐபிஎல், பிசிசிஐ மீது டுவிட்டர்வாசிகள் கடும் விமர்சனம்

விவோ டைட்டில் ஸ்பான்சரை தக்கவைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதால் டுவிட்டர்வாசிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

பிசிசிஐ-யால் ஐபிஎல் டி20 லீக் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக விவோ உள்ளது. இது சீன நிறுவனம். வருடத்திற்கு சுமார் 400 கோடி ரூபாய் பிசிசிஐ-க்கு வழங்குகிறது.

ஜூன் மாதம் லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன  வீரர்கள் கடுமையாக மோதிக் கொண்டனர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.

மத்திய அரசு சீன செயலிகளை தடைசெய்தது. சில மாநில அரசுகள், மத்திய மந்திரிகள் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று மக்களிடம் கேட்டுக்கொண்டனர். மக்களும் சீன பொருட்களை புறக்கணிக்க ஆரம்பித்தனர்.

அப்போதில் இருந்து ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக இருக்கும் விவோ உடனான தொடர்பை பிசிசிஐ விலக்கிக்கொள்ளுமா? என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்சிமன்றக்குழுவில் விவோ-தான் டைட்டில் ஸ்பான்சர் என்று அறிவித்தது. இது ரசிகர்களை கோபம் அடையச் செய்துள்ளது. இதனால் கோபம் அடைந்த டுவிட்டர்வாசிகள் ‘boycottIPL’ என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கியதுடன் இதை டிரெண்ட் ஆக்கி ஐபிஎல், பிசிசிஐ இரண்டையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ‘‘மக்களை புறக்கணிக்க சொல்கிறார்கள். ஆனால் ஐபிஎல் ஸ்பான்சராக விவோவை தக்கவைத்துள்ளனர்’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »