Press "Enter" to skip to content

மருத்துவர்களுடன்இனிப்புக்கட்டி (கேக்) வெட்டி கொண்டாடி நன்றி தெரிவித்த ஹர்திக் பாண்ட்யா – நடாசா தம்பதி

குழந்தை பிறந்த சந்தோசத்தை வெளிப்படுத்தும் விதமாக டாக்டர்களுடன் கேக் வெட்டி ஹர்திக் பாண்டியா – நடாசா தம்பதி கொண்டாடியது.

டாக்டர்களுடன் ஹர்திக் பாண்ட்யா – நடாசா

குழந்தை பிறந்த சந்தோசத்தை வெளிப்படுத்தும் விதமாக டாக்டர்களுடன் கேக் வெட்டி ஹர்திக் பாண்டியா – நடாசா தம்பதி கொண்டாடியது.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்ட்யா. இவர் செர்பிய நடிகை நடாசா ஸ்டான்கோவிச்சை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு கடந்த மாதம் 30-ந்தேதி ஆண் குழந்தை பிறந்தது. இன்ஸ்டாகிராமில் படத்தை வெளியிட்டு ஹர்திக் பாண்ட்யா குழந்தை பிறந்ததை வெளிப்படுத்தினார்.

நேற்று மருத்துவமனையில் டாக்டர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக கேக் வெட்டி கொண்டாடினார். இதுகுறித்த படத்தையும் இஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், அதில் ‘‘என்னுடைய குழந்தையை இந்த உலகத்திற்கு காட்டிய மருத்துவர்களுக்கு நன்றி, எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்’’ எனத்தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »