Press "Enter" to skip to content

நான் புல் திண்பேன், அது பாகிஸ்தான் ராணுவத்தின் வரவு செலவுத் திட்டத்தை அதிகரிக்கும் என்றால்: அக்தர்

பாகிஸ்தான் ராணுவத்தின் பட்ஜெட்டை அதிகரிக்கும் என்றால், அதற்காக புல்லை சாப்பிடுவேன் என்று சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர். இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி குறித்தும், இரு நாடுகளுக்கு இடையில் நிலவி வரும் பதற்றம் குறித்து அடிக்கடி கருத்து தெரிவிக்கும் நபர்களில் இவரும் ஒருவர்.

ARY News-க்கு அளித்த பேட்டியில் சோயிக் அக்தர் கூறியதாவது:-

அல்லா எனக்கு எல்லா வகையிலான அதிகாரத்தையும் கொடுத்தால், நான் புல் திண்பேன். ஆனால், ராணுவத்தின் பட்ஜெட்டை அதிகரிப்பேன்.

என்னுடன் அமர்ந்து முடிவுகளை எடுக்குமாறு ராணுவ தலைவரிடம் கேட்டுக்கொள்வேன். பட்ஜெட் 20 சதவீதமாக இருந்தால், அதை 60 சதவீதமாக மாற்றுவேன். நாம் ஒருவருக்கொருவர் அவமதித்துக் கொண்டால், இழப்பு நமக்கு மட்டுமே.

நாட்டிங்காம்ஷைர் அணியுடன் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பவுண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டேன். அதன்பின் 2002-ல் மேலும் ஒரு பெரிய ஒப்பந்தம் வந்தது. கார்கில் போர் நடக்கும்போது எதிர்த்து போராட இரண்டையும் தவிர்த்தேன்.

நான் லாகூரின் புறநகரில் நின்றேன். நான் அங்கு என்ன செய்கிறேன் என்று ஒரு ஜெனரல் என்னிடம் கேட்டார். போர் தொடங்கப்போகிறது, நாம் ஒன்றாக இறப்போம் என்று சொன்னேன். நான் இப்படி இரண்டு முறை கவுன்ட்டியை (கிரிக்கெட்) விட்டுவிட்டேன். கவுன்ட்டி அணி அதிர்ச்சியடைந்தன. நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. நான் காஷ்மீரில் உள்ள எனது நண்பர்களை அழைத்து, நான் போராட தயாராக இருக்கிறேன் என்று சொன்னேன்.

இந்தியாவில் இருந்து வந்த வி்மானங்கள் நமது சில மரங்களை சாய்த்தன. அது நமக்கு மிகப்பெரிய இழப்பு. அவர்கள் 6 முதல் 7 மரங்களை சாய்த்தனர். நாம் அவற்றின் மீது அதிகமான கவனம் செலுத்தினோம். அது எனக்கு மிகப்பெரிய வலியை ஏற்படுத்தியது.

அன்றைய தினம் காலை நான் எழுந்தபோது சற்று மயக்கமாக இருந்தது. எனது மனைவி அமைதியாக இருங்கள் என்று கூறினார். ஆனால் அடுத்த நாள் வரை டி.வி.யை பார்க்கும் வரைக்கும் அது தொடர்ந்தது. அடுத்தநாள் என்ன நடந்தது என்பதற்கான உள்கதை எனக்குத் தெரியும், நான் ராவல்பிண்டியைச் சேர்ந்தவன். ராணுவ தலைமையகம் எனக்குத் தெரியும் ’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »