Press "Enter" to skip to content

மான்செஸ்டர் சோதனை: பாகிஸ்தான் சுழலில் சிக்கி 219 ஓட்டத்தில் சுருண்டது இங்கிலாந்து

யாசீர் ஷா, சதாப் கான் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 219 ரன்களில் சுருண்டது.

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் ஷான் மசூத் (156), பாபர் அசாம் (69), சதாப் கான் (45) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 326 ரன்கள் குவித்து அல்-அவுட் ஆனது.

பின்னர் இங்கிலாந்து முதல் இன்னி்ங்சை தொடங்கியது. பாகிஸ்தானின் வேகப்சபந்து வீச்சாளர்கள் முகமது அப்பாஸ், நசீம் ஷா,  ஷாஹீன் ஷா ஆகியோர் துல்லியமாக பந்து வீச இங்கிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்திருந்தது.

ஒல்லி போப் 46 ரன்களுடனும், ஜோஸ் பட்லர் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஒல்லி போப் அரைதம் அடித்தார். ஆனால் 62 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

யாசீர் ஷா பட்லர் (38), கிறிஸ் வோக்ஸ் (19), பெஸ் (1) ஆகியோரை வெளியேற்ற இங்கிலாந்து தடுமாறியது. ஜாஃப்ரா ஆர்சர் (16), ஜேம்ஸ் ஆண்டர்சன் (7) ஆகியோரை சதாப் கான் வெளியேற்ற இங்கிலாந்து முதல் இன்னி்ங்சில் 219 ரன்னில் சுருண்டது.

பாகிஸ்தான் அணி தரப்பில் யாசீர் ஷா நான்கு விக்கெட்டும், சதாப் கான் மற்றும் முகமது அப்பாஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 107 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »