Press "Enter" to skip to content

கேப்டனாக 4 உலக சாதனைகள் படைத்த எம்.எஸ்.தோனி….

கிரிக்கெட் வரலாற்றில் 4 உலக சாதனைகள் படைத்த ஒரே கேப்டன் இந்திய அணியின் வீரர் எம்.எஸ்.தோனி.

2004ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானவர் எம் எஸ் டோனி. மூன்று வகை கிரிக்கெட்டிலும் கேப்டனாக திகழ்ந்த எம்எஸ் தோனி 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரின் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் ஒயிட்-பால் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக விளையாடி வந்தார்.

ஐசிசியின் மூன்று உலகக் கோப்பையை வாங்கிய ஒரே கேப்டன் என்ற சாதனையை பெற்றவர் எம்எஸ் தோனி. 2007 ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பை, 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையையும் பெற்றவர்.

2013 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன் டிராபியை வென்றார். இதன் மூலம் 3 ஐசிசி கோப்பையை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றார்.  

எம்எஸ் தோனி 332 சர்வதேச போட்டிகளுக்கு கேப்டனாக பதவி வகித்தார். இதன் மூலம் அதிக சர்வதேச போட்டிக்கு கேப்டனாக இருந்து சாதனை படைத்தார்.

இவர் 200 ஒருநாள் போட்டிகளுக்கும், 60 டெஸ்ட் போட்டிகளுக்கும் 72 டி20 போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்துள்ளார்,
ரிக்கி பாண்டிங் 324 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து 2வது இடத்தில் உள்ளார்.  

2 அணிகளுக்கு மேல் விளையாடிய தொடர்களில் 6 முறை அணியை இறுதி போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதில் நான்கு முறை இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.  இது ஒரு சாதனையாகும்.  

தோனி தலைமையில் இந்தியா 110 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளது. ரிக்கி பாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலியா 165 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.   தோனி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் அதிக முறை நாட் அவுட்டாக இருந்தவர் என்ற பெருமையை எம்எஸ் தோனி பெற்றுள்ளார்.  84 முறை நாட் அவுட்டாக இருந்து சாதனை படைத்துள்ளார். இதில்  51 முறை சேசிங் செய்யும் போது நாட் அவுட்டாக  இருந்துள்ளார்.   இதில் 2 முறை மட்டுமே தோல்வியை கண்டுள்ளது.   

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »