Press "Enter" to skip to content

ஐபிஎல் 2020: சிஎஸ்கே வீரர் ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு இன்னும் 2 சோதனை- முதல் 2 போட்டியில் சிக்கல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு இன்னும் இரண்டு பரிசோதனை செய்யப்பட இருப்பதால் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது.

ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தீபக் சாஹர், ருத்துராஜ் கெய்க்வாட் உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன்பிறகு தீபக் சாஹருக்கு இரண்டு முறை எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டில் என வர, நோயில் இருந்து குணமாகி அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் மேலும் 11 பேர்  குணமாகி அணியுடன் இணைந்துள்ளனர்.

ஆனால் பேட்ஸ்மேன் ஆன ருத்துராஜ் கெய்க்வாட் இன்னும் கொரோனாவில் இருந்து மீளவில்லை. இன்று அவருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட இருக்கிறது. அதன்பின் நாளையும் பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. இதில் நெகட்டிவ் வந்தால் அதன்பின் அணியில் இணைவார்.

இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் சிஇஓ கே.எஸ்.  விஸ்வநாதன் கூறுகையில் ‘‘ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு வழிகாட்டு நெறிமுறையின்படி இன்றும், நாளையும் கொரோனா பரிசோதளை மேற்கொள்ளப்படும். இரண்டு பரிசோதனையிலும் நெகட்டிவ் என வந்தால், ஓட்டலில் உள்ள அணியின் பாதுகாப்பு வளையத்திற்குள் சேர்க்கப்படுவார். மற்ற அனைவருக்கும் நெகட்டிவ் என வந்துள்ளதால் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளனர். அவர்கள் மீண்டும் அணியின் பாதுகாப்பு வளையத்திற்கள் வந்துவிட்டனர்’’ என்றார்.

கொரோனா பரிசோதனையில் நெகட்டில் என வந்தாலும் நுரையீரல் பாதிப்பு உள்பட சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இதனால் முதல் இரண்டு போட்டியில் பங்கேற்பது சந்தேகம் எனத் தெரிகிறது.

சென்னை அணியில் ரெய்னா இல்லாததால் ரித்துராஜ் 3-வது இடத்தில் களம் இறக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கருதப்படுகிறது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »