Press "Enter" to skip to content

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் டொமினிக் தீம்

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஆஸ்திரியாவை சேர்ந்த டொமினிக் தீம் சாம்பியன் பட்டம் பெற்றார்.

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஆஸ்திரியாவைச் சேர்ந்த டொமினிக் தீம், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் மோதினார்.

முதல் செட்டை 6-2 என ஸ்வெரேவ் எளிதில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டையும் 6-4  என கைப்பற்றி அசத்தினார்.

மூன்றாவது செட்டில் தீம் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்பயனாக அவர் 3-வது செட்டை 6-4 என கைப்பற்றினார்.  தொடர்ந்து 4வது செட்டையும் 6-3 என கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5-வது செட்டிலும் தீம் ஆக்ரோஷமாக ஆடினார். இதனால் அந்த செட்டையும் 7-6  எனக் கைப்பற்றி அசத்தினார்.

இறுதியில், 2-6, 4-6, 6-4, 6-3, 7-6 (6) என ஸ்வெரேவை வீழ்த்தி டொமினிக் தீம் சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்தப் போட்டி 4 மணி நேரம் நடைபெற்றது. முதல் 2 செட்டை இழந்தாலும் தளராமல் ஆடி டொமினிக் தீம் இறுதியில் பட்டம் வென்றதுகுறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »