Press "Enter" to skip to content

அலேக்ஸ் கேரி, மேக்ஸ்வெல் சதத்தால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

மான்செஸ்டரில் நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் அலேக்ஸ் கேரி, மேக்ஸ்வெல் ஆகியோரின் சதத்தால் 302 ஓட்டத்தில் சேஸிங் செய்து ஆஸ்திரேலியா தொடரை வென்றது.

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் மட்டையாட்டம் செய்த இங்கிலாந்து பேர்ஸ்டோவ் (112) சதத்தால் 50 சுற்றில் 7 மட்டையிலக்கு இழப்பிற்கு 302 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் 303 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா மட்டையாட்டம் செய்தது. ஆஸ்திரேலியா ஒரு கட்டத்தில் 73 ஓட்டங்கள் எடுப்பதற்குள் ஐந்து மட்டையிலக்குடுக்களை இழந்து திணறியது. டேவிட் வார்னர் (24), ஆரோன் பிஞ்ச் (12), மார்கஸ் ஸ்டாய்னிஸ் (4), லாபஸ்சாக்னே (20), மிட்செல் மார்ஷ் (2) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

6-வது மட்டையிலக்குடுக்கு அலேக்ஸ் கேரி உடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக மேக்ஸ்வெல் சிக்சர் மழை பொழிந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். 47.3 சுற்றில் 285 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது மேக்ஸ்வெல் 90 பந்தில் 4 பவுண்டர, 7 சிக்சர்களுடன் 108 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தனர். 293 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது அலேக்ஸ் கேரி 114 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 106 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

மிட்செல் விண்மீன்க் 3 பந்தில் 11 ஓட்டங்கள் அடிக்க ஆஸ்திரேலியா 49.4 சுற்றில் 7 மட்டையிலக்கு இழப்பிற்கு 305 ஓட்டங்கள் எடுத்து 3 மட்டையிலக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்ததால் தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. டி20 தொடரை 1-2 என இழந்ததற்கு பழிதீர்த்தது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »