Press "Enter" to skip to content

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற 163 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணி 20 சுற்றுகள் முடிவில் 9 மட்டையிலக்குடுகள் இழப்புக்கு 162 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

துபாய்:

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொண்டு வருகிறது.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்கிஸ் அணியின் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன் படி மும்பை அணி முதலில் மட்டையாட்டம்கை தொடங்கியது.

தொடக்க வீரர்களாக மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் குயின்டன் டி காக் களமிறங்கினர்.

ரோகித் சர்மா 10 பந்துகளில் 12 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

ஆனால், மறு முனையில் அதிரடியாக ஆடிய டிகாக் 20 பந்துகளில் 33 ஓட்டங்கள் எடுத்து சாம் கரன் பந்து வீச்சில் அவுட் ஆனார். 

பின்னர் வந்த சூர்ய குமார் யாதவ் 17 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சற்று நிலைத்து நின்று ஆடிய சவ்ரப் திவாரி 42 ஓட்டங்கள் எடுத்து ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். 

அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 14 ரன்னிலும் போலாட்டு 18 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் மும்பை அணி 20 சுற்றுகள் முடிவில் 9 மட்டையிலக்குடுகள் இழப்புக்கு 162 ஓட்டங்கள் எடுத்தது. 

சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக லிங்கிடி 3 மட்டையிலக்குடுகளையும், தீபக் சாஹார் மற்றும் ஜடேஜா தலா 2 மட்டையிலக்குடுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து 163 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்க உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »