Press "Enter" to skip to content

6 நாள் ‘கோரன்டைன்’ இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோஸ் பட்லர்

குடும்பத்துடன் ஐக்கிய அரபு அமீரகம் வந்துள்ளதால் கட்டாயம் ஆறு நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்பதால் ஜோஸ் பட்லர் முதல் ஆட்டத்தில் விளையாடவில்லை.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நேற்று தொடங்கியது. ஏறக்குறைய அனைத்து நாட்டு வீரர்களும் போட்டிக்கு தயாராகிவிட்டனர். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. அவர்கள் ஏற்கனவே இங்கிலாந்தில் பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்ததால் 36 மணி கோரன்டைன் இருந்தால் போதுமானது என அறிவிக்கப்பட்டது.

இதனால் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன் விளையாடினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் இடம்பிடித்துள்ளார். இவர் குடும்பத்துடன் ஐக்கிய அரபு அமீரகம் வந்துள்ளார். இதனால் ஆறு நாட்கள் கோரன்டைன் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாளைமறுதினம் (22-ந்தேதி) நடைபெறும் ஆட்டத்தில் பட்லர் பங்கேற்கமாட்டார்.

இதுகுறித்து ஜோஸ் பட்லர் கூறுகையில் ‘‘நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கான முதல் போட்டியை தவறவிடுகிறேன். ஏனென்றால், கோரன்டைன் இருக்க வேண்டியுள்ளது. நான் இங்கு குடும்பத்துடன் வந்துள்ளேன். எனது குடும்பத்துடன் வருவதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அனுமதி கொடுத்தது சிறந்த விசயம். இது எனக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »