Press "Enter" to skip to content

ஹாரி கேன் உதவியுடன் நான்கு கோல்கள் அடித்த ஹியுங்-மின் சன்: டோட்டன்ஹாம் வெற்றி

சவுத்தாம்ப்டன் அணிக்கெதிராக ஹாரி கேன் உதவியுடன் ஹியுங்-மின் சன் நான்கு கோல்கள் அடிக்க டோட்டன்ஹாம் 5-2 என வெற்றி பெற்றது.

டோட்டன்ஹாம் – சவுத்தாம்ப்டன் அணிகளுக்கு இடையிலான பிரிமீயர் லீக் கால்பந்து இன்று போட்டி நடைபெற்றது. சவுத்தாம்ப்டன் அணிக்கு சொந்தமான மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது. ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் சவுத்தாம்ப்டன் அணியின் டேனி இங்ஸ் முதல் கொலை பதிவு செய்தார். முதல் பாதி நேரம் ஆட்டம் முடியும் நேரத்தில் (45+2) ஹாரி கேன் கொடுத்த பந்தை ஹியுங்-மின் சன் கோலாக்கினார். இதனால் முதல் பாதி நேரத்தில் இரண்டு அணிகளும் 1-1 என சமநிலை பெற்றது.

2-வது பாதி நேர்த்தில் டோட்டன்ஹாம் அணியின் ஹாரி கேன், ஹியுங்-மின் சன் ஆட்டத்தில் அனல் பறந்தது. 47-வது, 64-வது மற்றும் 73-வது நிமிடத்தில் ஹாரி கேன் உதவியுடன் அடுத்தடுத்து மூன்று கோல்கள் அடித்தார.  ஹியுங். நான்கு கோலிற்கு உதவி புரிந்த நிலையில், 82-வது நிமிடத்தில் ஹாரி கேன் தனது பங்கிற்கு ஒரு ஓட்டத்தை அடித்தார். இதனால் டோட்டன்ஹாம் 5-1 என முன்னிலைப் பெற்றது.

90-வது நிமிடத்தில் சவுத்தாம்ப்டன் அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைக்க, டேனி இங்ஸ் அதை கோலாக்கினார். இதனால் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்ஸ் 5-2 என வெற்றி பெற்றது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »