Press "Enter" to skip to content

ஐபிஎல் 2020: ‘ஷார்ட்-ரன்’ என ஒரு ஓட்டத்தில் நடுவர் குறைத்ததால் தோல்வி- பஞ்சாப் அப்பீல்

ஜோர்டான் இரண்டு ரன்களுக்கு ஓடும்போது க்ரீஸை தொடவில்லை என்று நடுவர் ஒரு ஓட்டத்தில் குறைத்ததால் தோல்வியடைந்தோம் என பஞ்சாப் அணி குற்றம்சாட்டியுள்ளது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 157 ஓட்டங்கள் எடுத்தது. 2-வது 158 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி களம் இறங்கியது, அந்த அணிக்கு கடைசி இரண்டு பந்தில் ஒரு ஓட்டத்தை தேவைப்பட்டது. ஆனால் இரண்டு பந்திலும் மட்டையிலக்குடுகளை பறிகொடுத்ததால் போட்டி ‘டை’யில் முடிந்தது.

போட்டி ‘டை’யில் முடிந்ததால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வெற்றி பெற்றது. 

முதலில் விளையாடும்போது ஜோர்டான் இரண்டு ரன்களுக்கு ஓடினார். அப்போது க்ரீஸை தொடவில்லை (Short-run) என நடுவர் நிதின் மேனன் ஒரு ஓட்டத்தில் கழித்துவிட்டார். ஆனால் டி.வி. ரீ-பிளேயில் ஜோர்டான் பேட்டை க்ரீஸ்-க்குள் வைத்தது தெளிவாக தெரிந்தது. இந்த ஒரு ரன்தான் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிட்டது என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அப்பீல் செய்தது.

இதுகுறித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சிஇஓ சதீஷ் மேனன் கூறியதாவது ‘‘நாங்கள் போட்டி நடுவரிடம் அப்பீல் செய்தோம். மனிதர்கள் தவறு செய்வது இயல்பு என்பதை புரிந்து கொள்கிறோம். ஐபிஎல் போன்ற உலகத்தரம் வாய்ந்த தொடரில் இதுபோன்ற மனித தவறுகளுக்கு வழி வைக்கக் கூடாது. இந்த ஒரு ஓட்டத்தை எங்களுடைய பிளே-ஆஃப்ஸ் வாய்ப்பை கூட பறித்துவிடும்.

இழந்த போட்டி இழந்ததுதான். இது நியாயமானது அல்ல. விதிமுறைகள் மாற்றப்படும். சிறிய அளவிலான மனித தவறுகள் கூட நடைபெறாது என நம்புகிறோம்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »