Press "Enter" to skip to content

இத்தாலி ஓபனை வென்று ஜோகோவிச் புதிய சாதனை

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் ஸ்வாட்ஸ்மனை வீழ்த்தி 5-வது முறையாக பட்டத்தை கைப்பற்றினார்.

ரோம்:

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-5, 6-3 என்ற நேர்செட்டில் டியாகோ ஸ்வாட்ஸ்மனை (அர்ஜென்டினா) வீழ்த்தி 5-வது முறையாக இந்த பட்டத்தை கைப்பற்றினார். இது ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் மக்கள் விரும்பத்தக்கதுடர்ஸ் வகை டென்னிஸ் போட்டியாகும். இத்தகைய போட்டியில் ஜோகோவிச் ருசித்த 36-வது பட்டம் இதுவாகும். இதன் மூலம் ஆயிரம் தரவரிசை புள்ளி வழங்கும் மக்கள் விரும்பத்தக்கதுடர்ஸ் போட்டியில் அதிக பட்டங்களை வென்ற வீரர் என்ற சாதனையை ஸ்பெயினின் ரபெல் நடாலிடம் (35 பட்டம்) இருந்து ஜோகோவிச் தட்டிப்பறித்தார்.

இதன் பெண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கரோலினா பிளிஸ்கோவாவுக்கு (செக்குடியரசு) எதிராக சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-0, 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்த போது இடது தொடையில் ஏற்பட்ட காயத்தால் பிளிஸ்கோவா விலகினார். இதனால் வெற்றிக்கனியை பறித்த ஹாலெப் முதல்முறையாக இத்தாலி ஓபனில் மகுடம் சூடினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »