Press "Enter" to skip to content

ஐபிஎல் கிரிக்கெட் : பரபரப்பான ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.  முதலில் மட்டையாட்டம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் சஞ்சு சாம்சன் (74), ஸ்டீவ் ஸ்மித் (69) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 7 மட்டையிலக்கு இழப்பிற்கு 216 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் 217 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முரளி விஜய், வாட்சன் ஆகியோர் களம் இறங்கினர்.

தொடக்கத்தில் இருவரும் சற்று தடுமாறினாலும் அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தனர். ஆனால் வாட்சன் 21 பந்தில் 4 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 33 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வாட்சன் ஆட்டமிழந்த அடுத்த சுற்றில் முரளி விஜய் 21 பந்தில் 21 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் 7.3 சுற்றில் 58 ஓட்டங்கள் எடுப்பதற்குள் தொடக்க ஜோடியை இழந்தது. அடுத்து டு பிளிஸ்சிஸ் உடன் சாம் கர்ரன் ஜோடி சேர்ந்தார். கர்ரன் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 6 பந்தில் 17 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அடுத்த பந்தில் ருத்துராஜ் கெய்க்வாட் ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 9 ஓவரில 77 ஓட்டங்கள் எடுப்பதற்குள் நான்கு மட்டையிலக்குடுகளை இழந்துள்ளது. ஐந்தாவது மட்டையிலக்குடுக்கு டு பிளிஸ்சிஸ் உடன் கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்துள்ளார்.

16 பந்துகளில் 22 ஓட்டங்கள் எடுத்திருந்த ஜாதவ் டாம் கரன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் அதிரடியாக ஆடிய டு பிளஸ்சிஸ் 37 பந்துகளில் 7 சிக்சர்கள் உள்பட 72 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

ஆனால், இறுதியில் 20 சுற்றுகள் முடிவில் 6 மட்டையிலக்குடுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 200 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், சென்னை அணியை 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. 

இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த சென்னை அணியின் கேப்டன் மகேந்திரசிங் டோனி 16 பந்துகளில் 3 சிக்சர்கள் உள்பட 29 

ரன்களுடனும், ஜடேஜா 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் 2020 போட்டியில் ராஜஸ்தான் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.   

Related Tags :

 ஐபிஎல் 2020 பற்றிய செய்திகள் இதுவரை…

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »