Press "Enter" to skip to content

ஓவருக்கு 16.33 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்த பேட் கம்மின்ஸ்: ட்ரோல் செய்யும் டுவிட்டர்வாசிகள்

ஐபிஎல் வரலாற்றில் 15.5 கோடி ரூபாய்க்கு ஏலம் போன பேட் கம்மின்ஸ் ஒரு ஓவருக்கு சராசரியாக 16.33 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. முதலில் மும்பை இந்தியன்ஸ் மட்டையாட்டம் செய்தது. கொல்கத்தா அணியில் பேட் கம்மின்ஸ் இடம் பிடித்திருந்தார்.

அவரை கொல்கத்தா 15.5 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்திருந்தது. வெளிநாட்டு வீரர் ஒருவர் இவ்வளவு தொகைக்கு (15.5 கோடி ரூபாய்) ஏலம் எடுக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். இவர் சிறப்பாக பந்து வீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா அவரது பந்தை துவம்சம் செய்தனர். 3 சுற்றுகள் மட்டுமே வீசி 49 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார். ஒரு ஓவருக்கு சராசரியாக 16.33 ஓட்டங்கள் ஆகும்.

15.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு சொதப்பியதால் ரசிகர்கள் டுவிட்டரில் ட்ரோல் செய்து வருகின்றனர். ரசிகர் ஒருவர் ‘‘நான் பேட் கம்மின்ஸ். என்னால் ஷார்ட் பிட்ச் பால் மட்டுமே வீச முடியும். என்னிடம் வேரியேசன் கிடையாது. கேகேஆர் அணியின் மிகப்பெரிய நேரத்தை முட்டாள்தனமாக்குகிறேன். ஒரு போட்டிக்கு 1.2 கோடி ரூபாய் வாங்குகிறேன்’’ என விமர்சனம் செய்துள்ளார்.

மற்றொரு ரசிகர் ஒருவர் ‘‘போட்டி முடிந்த பிறகு, யாராவது ஒருவர் கேகேஆர் உரிமையாளருக்கு முதலீட்டின் மீதான வருவாய் (ROI) விருதை வழங்கலாம்’’ என்றார்.

மற்றொரு ரசிகர் ‘‘பவுலர் மோசமான நாளில் இதுவும் ஒன்று’’ என ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இன்னொரு ரசிகர் ‘‘அதிக ஓட்டங்கள் கொடுத்த ஐபிஎல் பந்து வீச்சாளர்களின் அகாடமிக்கு அழைக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »