Press "Enter" to skip to content

டெல்லி தோல்விக்குப்பிறகு மிகவும் நேர்மறையான சிந்தனையுடன் இருக்கிறோம்: பஞ்சாப் கோச் அனில் கும்ப்ளே

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தோல்வியை சந்தித்தப் பிறகு நேர்மறையான சிந்தனையுடன் இருப்பதாக பஞ்சாப் அணி பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி கடந்த 20-ந்தேதி துபாயில் நடைபெற்றது. முதலில் மட்டையாட்டம் செய்த டெல்லி 157 ஓட்டங்கள் அடித்தது, பின்னர் 158 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் களம் இறங்கியது. தொடக்க வீரர் மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார். ஆனால் கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் ஸ்கோர் சமநிலையில் இருக்கும்போது ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் ஜோர்டான் ஆட்டமிழந்ததால் போட்டி டையில் முடிந்தது. சூப்பர் சுற்றில் பஞ்சாப் அணி தோல்வியை சந்தித்தது.

இந்தப் போட்டிக்குப் பிறகு மிகவும் நேர்மறையான சிந்தனையுடன் இருப்பதாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘ஆர்சிபி வலுவான மட்டையாட்டம் ஆர்டரை கொண்டது என்று உங்களுக்கு தெரியும். விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்கள். கடந்த போட்டியில் படிக்கல் சிறப்பாக மட்டையாட்டம் செய்துள்ளார். இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவதை பார்க்கும்போது மகத்தானதாக இருக்கிறது. இருந்தாலும் நாங்கள் எங்கள் திட்டத்துடன் செல்வோம்.

நாங்கள் அனைத்து துறையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமையை பெற்றுள்ளோம். அந்த நாட்கள் சிறப்பாக விளையாடுவதை பொறுத்து எல்லாமே அமையும். கடந்த ஒரு மாதமாக எங்களுடைய தயார்படுத்துதல் சிறப்பாக இருந்தது. டெல்லி போட்டிக்குப் பிறகு மிகவும் நேர்மறையான சிந்தனையுடன் இருக்கிறோம். என்ன செய்ய வேண்டும். இந்த இடத்தில் தவறுகளை திருத்தி செயல்பட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். ஆர்சிபி-க்கு எதிராக அது மைதானத்தில் விளையாடுகிறோம். குறிப்பிட்ட நாளில் அந்த போட்டியில் மட்டும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »