Press "Enter" to skip to content

கேப்டனாக என்ன செய்ய வேண்டும் என்பதை ரிக்கி பாண்டிங் இடம் இருந்து கற்றுக் கொண்டேன்: ரோகித் சர்மா

கேப்டனாக நாம் மற்ற வீரர்களை செய்யச் சொல்வதை விட அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பது குறித்து யோசிப்பதுதான் முக்கியமானது என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையில் நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளது.

ரிக்கி பாண்டிங் தலைமை பயிற்சியாளராக இருந்தபோது ரோகித் சர்மா கேப்டனாக இருந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். கேப்டன் பதவியில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை ரிக்கி பாண்டிங்கியிடம் இருந்து கற்றுக் கொண்டேன் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘நான் என்ன செய்கிறேனோ, அதேபோன்று சக வீரர்களும் செய்ய வேண்டும் என விரும்புவேன். நான் என்னுடைய வீரர்களுடன் பேசும்போது, நான் என்னையே முக்கியத்துவம் குறைந்த நபராக நினைத்துக் கொள்வேன். நான் முக்கியமான நபர் இல்லை என்றால், நீங்கள் முக்கியமான நபர். ஏனென்றால், நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ, அதை உங்களால் வெளிப்படுத்த முடியும்.

நான் அணி எப்படி செல்ல வேண்டும் என்று நினைத்தால், அதை என்னால் செய்ய இயலாது. நான் கடைசி நபர் என்றால், மற்ற 10 பேரும் எனக்கு முக்கியமானவர்கள்.’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »