Press "Enter" to skip to content

வீரர்களின் கூட்டு முயற்சியால் வெற்றி: டெல்லி அணி தற்காலிக கேப்டன் தவான்

ராஜஸ்தான் அணிக்கெதராக ஷ்ரேயாஸ் அய்யர் காயத்தால் வெளியேற, தவான் கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டு சிறப்பாக செயல்பட்டார்.

ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தானை மீண்டும் வீழ்த்தி டெல்லி அணி 6-வது வெற்றியை பெற்றது. துபாயில் நடந்த 30 -வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 சுற்றில் 7 மட்டையிலக்கு இழப்புக்கு 161 ஓட்டத்தை எடுத்தது.

ஷிகர் தவான் 33 பந்தில் 57 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர் ), கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 43 பந்தில் 53 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஆர்சர் 3 மட்டையிலக்குடும், உனத்கட் 2 மட்டையிலக்குடும் தியாகி, ஷ்ரேயாஸ் கோபால் தலா 1 மட்டையிலக்குடும் கைப்பற்றினார்கள்.

பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 8 மட்டையிலக்கு இழப்புக்கு 148 ஓட்டத்தை எடுத்தது. இதனால் டெல்லி அணி 13 ஓட்டத்தை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பென் ஸ்டோக்ஸ் 35 பந்தில் 41 ரன்னும் (6 பவுண்டரி), உத்தப்பா 27 பந்தில் 32 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். அன்ரிச் நோர்ஜ், துஷ்கார் தேஷ்பாண்டே தலா 2 மட்டையிலக்குடும் ரபடா, அஸ்வின், அக்‌ஷர் பட்டேல் தலா 1 மட்டையிலக்குடும் வீழ்த்தினார்கள்.

டெல்லி அணி பெற்ற 6-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அந்த அணி மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறியது. அந்த அணி ராஜஸ்தானை மீண்டும் வீழ்த்தி உள்ளது. ஏற்கனவே 46 ஓட்டத்தில் தோற்கடித்தது.

கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் பாதியில் வெளியேறினார். இதனால் ஆட்டத்தின் பிற்பகுதியில் தவான் அணியை வழி நடத்தினார்.

ராஜஸ்தானை வீழ்த்தியது குறித்து டெல்லி அணியின் தற்காலிக கேப்டன் தவான் கூறியதாவது:-

இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. வீரர்களின் கூட்டு முயற்சியால் வெற்றி கிடைத்தது. ராஜஸ்தான் அணியின் மட்டையாட்டம் வரிசையை புரிந்து அதற்கேற்ற வகையில் செயல்பட்டோம். அதை எங்களுக்கு சாதகமாக்கி கொண்டோம். அனுபவம் வாய்ந்த பந்துவீச்சு எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது.

ஷ்ரேயாய் அய்யருக்கு தோள்பட்டையில் சிறிய வலி இருக்கிறது. அதன் முழு விவரம் இன்று தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராஜஸ்தான் அணி 5-வது தோல்வியை தழுவியது. இது குறித்து அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் சுமித் கூறும்போது “இந்த தோல்வி எனக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. எங்களது தொடக்கம் சிறப்பாக இருந்தது. பந்துவீச்சுக்கு ஏற்ற இந்த ஆடுகளத்தில் அதிகமான மட்டையிலக்கு விழுந்ததால் இலக்கை எட்ட முடியாமல் போய்விட்டது” என்றார்.

டெல்லி அணி 9-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை 17-ந்தேதி சார்ஜாவில் சந்திக்கிறது. ராஜஸ்தான் அடுத்த போட்டியில் அதே தினத்தில் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »