Press "Enter" to skip to content

ஐபிஎல் கிரிக்கெட்: ருத்ர தாண்டவம் ஆடிய டி வில்லியர்ஸ் – ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூர் அபார வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் டி வில்லியர்சின் அதிரடியால் ராஜஸ்தான் அணியை 7 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றது.

துபாய்:

ஐபிஎல் தொடரின் 33-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர் பெங்களூரு – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்டீவ் சுமித் மட்டையாட்டம் தேர்வு செய்துள்ளார்.

அதன்படி, ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளான ராபின் உத்தப்பா ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

ராஜஸ்தான் 5.4 சுற்றில் 50 ரன்களை எடுத்த நிலையில் தொடக்க வீரரான ஸ்டோக்ஸ் 15 ஓட்டத்தில் வெளியேறினார்.

22 பந்துகளை சந்தித்த உத்தப்பா 7 பவுண்டரிகள், 1 சிக்சர் உள்பட 41 ஓட்டங்கள் குவித்து சாஹல் பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்துவந்த சஞ்சுவ் சாம்சங் 9 ஓட்டத்தில் வெளியேறினார். 

7.5 சுற்றில் 3 மட்டையிலக்குடுகளை இழந்து 69 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ராஜஸ்தான் அணி சற்று தடுமாறியது. அடுத்துவந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ஜோஸ் பட்லர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

25 பந்துகளை சந்தித்த பட்லர் 24 ஓட்டங்கள் எடுத்த நிலையில் மோரிஸ் பந்து வீச்சில் வெளியேறினார். 36 பந்துகளை சந்தித்த ஸ்டீவ் ஸ்மித் 

1 சிக்சர் 6 பவுண்டரிகள் உள்பட 57 ஓட்டங்கள் குவித்து மோரிஸ் பந்தில் வெளியேறினார்.

இறுதியாக 20 சுற்றுகள் முடிவில் 6 மட்டையிலக்குடுகளை இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 177 ரன்களை குவித்தது. அந்த அணியின் ராகுல் தெவாட்டியா 11 பந்துகளை சந்தித்து 19 ரன்னிலும்,ஆர்ச்சர் 2 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

பெங்களூர் தரப்பில் அந்த அணியின் கிரிஸ் மோரிஸ் அதிகபட்சமாக 4 மட்டையிலக்குடுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, 178 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

11 பந்துகளை சந்தித்த பிஞ்ச் 14 ரன்னிகள் எடுத்த நிலையில் ஸ்ரேஷ் கோபால் பந்தில் வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் கோலி, படிக்கல்லுடன் உடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.   

37 பந்துகளை சந்தித்த படிக்கல் 2 பவுண்டரிகள் உள்பட 35 ரன்களுடன் ராகுல் தேவாட்டியா பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். படிக்கல் வெளியேறிய உடனேயே 32 பந்தில் 43 ஓட்டங்கள் குவித்திருந்த கேப்டன் கோலியும் கார்த்திக் தியாகி பந்து வீச்சில் வெளியேறினார்.

இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய ஏபி டிவில்லியர்ஸ், குர்கித்ரட் சிங் மேனுடன் ஜோடி சேர்ந்தார். குர்கித்ரட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், மறுமுனையில் டி வில்லியர்ஸ் ருத்ர தாண்டவம் ஆடினார். 

18 சுற்றில் 143 ஓட்டங்கள் எடுத்திருந்த பெங்களூர் அணி வெற்றிபெற 2 சுற்றில் 35 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை வீசிய உனாத்கட் பந்து வீச்சை டிவில்லியர்ஸ் புரட்டி எடுத்தார். அந்த சுற்றில் 3 சிக்சர்கள் உள்பட 25 ஓட்டங்கள் குவிந்தது. 

இறுதியாக 19.4 ஓவரிலேயே பெங்களூர் அணி 179 ரன்களை எட்டியது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 மட்டையிலக்குடுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றது.

அதிரடியாக ஆடிய டிவில்லியர்ஸ் 22 பந்துகளில் 1 பவுண்டரி, 6 சிக்சர்கள் உள்பட 55 ஓட்டங்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று வெற்றிக்கு வழிவகுத்தார்.

ராஜஸ்தான் அணியின் ஸ்ரேஷ் கோபால், கார்திக் தியாகி, தேவாட்டியா ஆகியோர் தலா 1 மட்டையிலக்குடுகளை வீழ்த்தினர். சிறப்பாக ஆடிய டிவில்லியர்ஸ் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »