Press "Enter" to skip to content

சோபியா ஓபன் டென்னிஸ் போட்டி- பட்டம் வென்று சாதனை படைத்த இளம் வீரர்

சோபியா ஓபன் டென்னிஸ் போட்டியில் இத்தாலி நாட்டின் ஜன்னிக் சின்னர் இளம் வயதில் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

சோபியா:

சோபியா ஓபன் டென்னிஸ் இறுதி போட்டி பல்கேரியா நாட்டில் நடந்தது.  இதில், இத்தாலி நாட்டின் ஜன்னிக் சின்னர் மற்றும் கனடா நாட்டின் வாசிக்
பொஸ்பிசில் ஆகியோர் விளையாடினர்.  இதில், 6-4, 3-6, 7-6(3) என்ற செட் கணக்கில் சின்னர் வெற்றி பெற்றார்.  இதனால் தனது 19-வது வயதில்
முதன்முறையாக ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு ஜப்பான் நாட்டின் கெய் நிஷிகோரி தனது 18-வது வயதில் டெல்ரே பீச் ஓபன் போட்டியில் ஆடவர் பிரிவில் பட்டம் வென்று இளம்
வீரர் என்ற சாதனைக்கு உரியவரானார்.

அதன்பின்னர் 12 ஆண்டுகள் கழித்து இந்த சாதனையை படைத்த இளம் வீரராக சின்னர் உள்ளார்.  இந்த ஆண்டில் உகோ ஹம்பர்ட், கேஸ்பர் ரூட்,
தியாகோ செய்போத் வைல்ட், மியோமிர் கெக்மனோவிக் மற்றும் ஜான் மில்மேன் ஆகியோருக்கு அடுத்து முதன்முறையாக பட்டம் பெறும் 6-வது
நபராக சின்னர் உள்ளார்.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »