Press "Enter" to skip to content

ரோஹித்தை கேப்டனாக்க வேண்டும் என்பவர்களுக்கு ஆகாஷ் சோப்ரா கேள்வி

ரோகித் சர்மாவிடம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை கொடுத்திருந்தால் ஐந்தில் இரண்டு, மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பாரா? என ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளார்.

இதனால் கவுதம் கம்பிர் உள்பட கிரிக்கெட் விமர்சகர்கள் இந்திய ஒயிட்-பால் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை ரோகித் சர்மாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.

இந்நிலையில் இதுகுறித்த விவாத்திற்கு பதில் அளித்த ஆகாஷ் சோப்ரா, ‘‘இந்திய கிரிக்கெட் அணி ரோகித் சர்மாவை கேப்டனாக்கவில்லை என்றால், அது அணிக்கு துரதிருஷ்டம் என கம்பிர் நம்புகிறார். ஏனென்றால், ரோகித் சர்மா அதிக முறை ஐபிஎல் கோப்பையை வென்றவர்.

ஆனால் நான் கேட்கும் கேள்வி, ஆர்சிபி அணியை ரோகித் சர்மாவிடம் கொடுத்து, அந்த அணியில் விராட் கோலியும் இருந்திருந்தால், அவர் மும்பை இந்தியன்ஸ் வென்றதில் இரண்டு, மூன்று அல்லது நான்கு கோப்பையை வென்றிருப்பாரா?

ரோகித் சர்மாவின் கேப்டன் செயல்பாடு அற்புதம். நான் அவரது பணியை விரும்புகிறேன். ஆனால், மும்பை இந்தியன்ஸ் வெற்றியை இந்திய அணியுடன் தொடர்பு படுத்த முடியுமா?. இதுதான் என்னுடைய கேள்வி. கோலியின் அணி சரியாக விளையாடவில்லை என்றால், அதற்கு அர்த்த, கோலி தவறு என்பதா?’’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »