Press "Enter" to skip to content

கொலைகாரன் இல்லாதது ஆஸி.க்கு லாபம்: ஆனால் கேஎல் ராகுல் சிறந்த வீரர் என்கிறார் மேக்ஸ்வெல்

ரோகித் சர்மா ஒயிட்-பால் கிரிக்கெட்டில் விளையாடாதது ஆஸ்திரேலியாவுக்கு உதவிகரமாக இருக்கும் என மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் ரோகித் சர்மா காயம் காரணமாக இடம்பெறவில்லை. இந்திய ஒயிட்-பால் அணியின் துணைக்கேப்டனாக இருந்த ரோகித் சர்மா இல்லாததால் கேஎல் ராகுல் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ரோகித் சர்மா இல்லாதது ஆஸ்திரேலிய அணிக்கு நேர்மறையான விஷயமாக இருக்கும் என்று அதரிடி பேட்டிஸ்மேன் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேக்ஸ்வெல் கூறுகையில் ‘‘ரோகித் சர்மா மிகவும் சிறந்த பேட்ஸ்மேன். தொடர்ச்சியாக தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடும் ரோகித் சர்மா, மூன்று இரட்டை சதங்கள் விளாசியுள்ளார். ஆகவே, அவர் அணியில் இல்லாமல் இருப்பது எப்போதும் மற்ற அணிகளுக்கு நேர்மறையான விசயமாகத்தான் இருக்கும்.

ஆனால் இந்திய அணி சிறந்த பேக்-அப் வீரர்களை வைத்துள்ளது. ஏராளமானோர் அந்த இடத்திற்கு உள்ளனர். கேஎல் ராகுலை பார்த்தீர்கள் என்றால், ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் தொடக்க வீரராக இறங்கினாலும் சரி, இறங்காவிட்டாலும் சரி, அவர் சிறந்த வீரராக விளங்குவார் என்பதை உறுதியாக கூற இயலும்.

மயங்க் அகர்வால்- கேஎல் ராகுல் ஆகிய இரண்டு பேரும் சிறந்த வீரர்கள் என்பதை உறுதியாக சொல்வேன். பஞ்சாப் அணிக்கான வீரர்கள் அறையில் அவர்களுடன் நேரம் செலவழித்தது மகிழ்ச்சி. எல்லா திசையிலும் பந்துகளை விரட்டினர். அவர்களிடம் குறைவான பலவீனமே உள்ளது’’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »