Press "Enter" to skip to content

ஐபிஎல் போட்டி- இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி வருமானம்

ஐபிஎல் போட்டிகள் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்து உள்ளது.

மும்பை:

இந்தியாவில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் இருந்ததால் 2020 ஐபிஎல் தொடர் கடும் சிக்கல்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளுக்கும் இடையே ஐக்கிய அமீரகத்தில் நடந்து முடிந்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் நடைபெற்றன.

 இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமல் வெளியிட்டு உள்ள தகவல்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற ஐபிஎல் போட்டி மூலம் இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ .4,000 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. தொலைக்காட்சி பார்வையாளர்களின் எண்ணிக்கை “கடந்த ஆண்டை விட சுமார் 25 சதவீதம் அதிகரித்து உள்ளது. 60 போட்டிகளில் 1800 தனி நபர்கள் உள்பட 30 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது என தெரியவந்து உள்ளது

அருண் துமல் கூறும்போது கடந்த ஐபிஎல் உடன் ஒப்பிடும்போது வாரியம் கிட்டத்தட்ட 35 சதவீத செலவை குறைக்க முடிந்தது. நாங்கள் ரூ.4,000 கோடி சம்பாதித்தோம். எங்கள் தொலைக்காட்சி பார்வையாளர்கள் சுமார் 25 சதவீதம் உயர்ந்து உள்ளனர் என கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »