Press "Enter" to skip to content

நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா?

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்திய நேரப்படி நாளை காலை 9.10 மணிக்கு சிட்னி மைதானத்தில் நடக்கிறது.

ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு இந்திய கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள், மூன்று டி20, 4 சோதனை போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது. நேற்றுடன் இந்திய வீரர்களின் 14 நாள் கோரன்டைன் முடிவடைந்தது. யாருக்கும் கொரோனா பாசிட்டிவ் இல்லை.

இந்த நிலையில் நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. முதல் ஆட்டம் சிட்னியில் இந்திய நேரப்படி காலை 9.10 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணி கடைசியாக விளையாடிய ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகளில் தோல்வியடைந்து 0-3 எனத் தொடரை இழந்திருந்தது.

ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றியோது தொடரை தொடங்க வேண்டும் என இந்திய அணி விரும்பும். மட்டையாட்டம்கில் விராட் கோலி, தவான், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், ஹர்திக் பாண்ட்யா உள்ளனர். ரோகித் சர்மாவுக்குப் பதிலாக தொடக்க வீரராக களம் இறங்குவதில் மயங்க் அகர்வால்- ஷுப்மான் கில் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவும்.

பந்து வீச்சில் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் இணைந்து விளையாடுவார்களா? என்பது சந்தேகம். வொர்க்லோடு காரணமாக இருவரில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது. இதனால் காம்பினேசன் எவ்வாறு இருக்கும் என்பதில் சந்தேகம் உள்ளது.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரைக்கும் ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர், ஸ்மித், மார்னஸ் லாபஸ்சேன் மேக்ஸ்வல், ஸ்டோய்னிஸ், அலேக்ஸ் கேரி என ஒரு பட்டாளமே உள்ளது. அதேபோல் பந்து வீச்சிலும் பேட் கம்மின்ஸ், மிட்செல் விண்மீன்க், ஆடம் ஜம்பா போன்றோர் அசத்துவார்கள். சொந்த மண்ணில் பலத்தை காட்ட ஆஸ்திரேலியா துடிக்கும்.

இதனால் முதல் போட்டி பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »