Press "Enter" to skip to content

ஆரோன் பிஞ்ச், ஸ்டீவ் ஸ்மித் அபார சதத்தால் இந்தியாவுக்கு 375 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

சிட்னியில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு 375 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் மட்டையாட்டம் தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணியின் ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் இருந்தே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஆஸ்திரேலியா அணி மட்டையிலக்கு இழக்காமல் சீரான வகையில் ஓட்டங்கள் எடுத்து வந்தது.

பவர்பிளே-யான முதல் 10 சுற்றில் மட்டையிலக்கு இழப்பின்றி 51 ஓட்டங்கள் எடுத்தது. ஆரோன் பிஞ்ச் 69 பந்திலும், டேவிட் வார்னர் 54 பந்திலும் அரைசதம் அடித்தனர். அணியின் ஸ்கோர் 27.5 சுற்றில் 156 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது.

டேவிட் வார்னர் 76 பந்தில் 69 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்டீவ் ஸ்மித் களம் இறங்கினார். இவர் தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

ஸ்டீவ் ஸ்மித் 36 பந்தில் 8 பவுண்டரியுடன் அரைசதம் விளாசினார். ஆஸ்திரேலியா 39 சுற்றில் 250 ஓட்டத்தில்த் தொட்டது. ஆரோன் பிஞ்ச் 117 பந்தில் சத்ம அடித்தார். தொடர்ந்து விளையாடிய ஆரோன் பிஞ்ச் 124 பந்தில் 114 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அப்போது ஆஸ்திரேலியா 40 சுற்றில் 264 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

அடுத்து வந்த ஸ்டோய்னிஸ் முதல் பந்திலேயே வெளியேறினார். ஆனால் மேக்ஸ்வெல் 19 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 45 ஓட்டங்கள் அடித்து ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்தார். மேக்ஸ்வெல் களத்தில் நிற்கும்போது ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 400 ஓட்டத்தில்த் தாண்டும் நிலையில் இருந்தது. அவர் அவுட்டானதும் ஸ்கோர் உயரும் வேகம் சற்று குறைந்தது.

ஸ்மித் சிறப்பாக விளையாடி 62 பந்தில் 10 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் கடைசி சுற்றில் 105 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஸ்டீவ் ஸ்மித் 66 பந்தில் 11 பவுண்டரி, 4 சிக்சருடன் 105 ஓட்டங்கள் அடித்தார்.

ஆரோன் பிஞ்ச், ஸ்டீவ் ஸ்மித் சதத்தால் ஆஸ்திரேலியா 50 சுற்றில் 6 மட்டையிலக்கு இழப்பிற்கு 374 ஓட்டங்கள் குவித்துள்ளது. முகமது சமி 59 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 மட்டையிலக்குடும், பும்ரா 73 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 1 மட்டையிலக்குடும், சைனி 83 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 1 மட்டையிலக்குடும், சாஹல் 89 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 1 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

பின்னர் 375 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா மட்டையாட்டம் செய்ய இருக்கிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »