Press "Enter" to skip to content

அதிக சதம்: கில்கிறிஸ்ட்-ஐ பின்னுக்குத் தள்ளினார் ஆரோன் பிஞ்ச்

இந்தியாவுக்கு எதிராக 114 ஓட்டங்கள் விளாசிய ஆரோன் பிஞ்ச், அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் கில்கிறிஸ்ட்-ஐ பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலில் மட்டையாட்டம் செய்த ஆஸ்திரேலியா 374 ஓட்டங்கள் குவித்தது. தொடக்க வீரரும், ஆஸ்திரேலியாவின் கேப்டனுமான ஆரோன் பிஞ்ச் 114 ஓட்டங்கள் விளாசினார். இது அவருக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 17-வது சதம் ஆகும்.

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் கில்கிறிஸ்ட்-ஐ பின்னுக்குத் தள்ளி 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ரிக்கி பாண்டிங் 29 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார். வார்னர், மார்க் வாக் ஆகியோர் தலா 18 சதங்களுடன் 2-வது இடத்தில் உள்ளனர். கில்கிறிஸ்ட் 16 சதங்களுடன் 4-வது இடத்தை பிடித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »