Press "Enter" to skip to content

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் சோதனை – வில்லியம்சன் இரட்டை சதம்

ஹாமில்டனில் நடந்து வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் சோதனை போட்டியில் நியூசிலாந்து அணி 519 ஓட்டத்தை குவித்து டிக்ளேர் செய்தது.

ஹாமில்டன்:

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் 2 ஆட்டம் கொண்ட சோதனை தொடரில் முதல் சோதனை போட்டி நேற்று ஹாமில்டனில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

நியூசிலாந்து தொடக்க வீரர் யங் 5 ஓட்டத்தில் ஆட்டம் இழந்தார். அதன்பின் டாம் லாதம் – கேப்டன் வில்லியம்சன் ஜோடி சிறப்பாக விளையாடியது. டாம் லாதம் 86 ஓட்டத்தில் ஆட்டம் இழந்தார். வில்லியம்சன் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 78 சுற்றில் 2 மட்டையிலக்கு இழப்புக்கு 243 ஓட்டத்தை எடுத்திருந்தது. வில்லியம்சன் ஆட்டம் இழக்காமல் 97 ரன்னுடனும், டெய்லர் 31 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. வில்லியம்சன் தனது 22-வது சதத்தை பூர்த்தி செய்தார். டெய்லர் 38 ரன்னிலும், அடுத்து வந்த நிக்கோலஸ் 7 ரன்னிலும், பிளன்டெல் 9 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

ஆனாலும் வில்லியம்சன் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு ஜேமிசன் உறுதுணையாக விளையாடினார். சிறப்பாக விளையாடிய வில்லியம்சன் இரட்டை சதம் அடித்தார். இது அவரது 3-வது இரட்டை சதம் ஆகும். அவர் 251 ஓட்டத்தில் ஆட்டம் இழந்தார். இது பந்துவீச்சு சுற்றில் அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

நியூசிலாந்து அணி 145 சுற்றில் 7 மட்டையிலக்கு இழப்புக்கு 519 ஓட்டத்தை குவித்து டிக்ளேர் செய்தது. ஜேமிசன் 51 ரன்களுடனும், டிம்சவுத்தி 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோச், கேப்ரியல் தலா 3 மட்டையிலக்கு வீழ்த்தினர். பின்னர் வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் பந்துவீச்சு சுற்றுசை விளையாடியது. ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் மட்டையிலக்கு இழப்பின்றி 49 ஓட்டத்தை எடுத்து இருந்தது. கேம்பல் 22 ரன்னுடனும், பிராத்வெயிட் 20 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »