Press "Enter" to skip to content

அடுத்த இரண்டு போட்டிகளுக்கும் ரோகித் சர்மா துணைக் கேப்டனாக நியமனம்

சிட்னி, பிரிஸ்பேன் சோதனை போட்டிக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய சோதனை அணியின் கேப்டனாக விராட் கோலியும், துணைக் கேப்டனாக ரஹானேவும் உள்ளனர். அடிலெய்டு சோதனை போட்டி முடிந்த பிறகு விராட் கோலி இந்தியா திரும்பியதால் ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அப்போது புஜாரா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.

காயத்தில் இருந்தும் மீண்ட ரோகித் சர்மா, ஆஸ்திரேலியா சென்று கோரன்டைனை முடித்துக் கொண்டு கடைசி இரண்டு போட்டியில் விளையாடுவதற்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அடுத்த இரண்டு போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. புஜாராவுக்குப் பதிலாக ரோகித் சர்மா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய ஒயிட்-பால் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனாக ரோகித் சர்மா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி இரண்டு போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ரஹானே (கேப்டன்),  2. ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), 3. மயங்க் அகர்வால், 4. பிரித்வி ஷா,  5. கேஎல் ராகுல், 6. புஜாரா, 7. ஹனுமா விஹாரி, 8. ஷுப்மான் கில், 9. விருத்திமான் சாஹா, 10. ரிஷப்  பண்ட், 11. ஜஸ்பிரித் பும்ரா, 12. நவ்தீப் சைனி, 13. குல்தீப் யாதவ், 14. ரவீந்திர ஜடேஜா, 15. ஆர். அஸ்வின், 16. முகமது சிராஜ், 17. ஷர்துல் தாகூர், 18. டி நடராஜன்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »