Press "Enter" to skip to content

சிட்னி தேர்வில் புஜாரா, ரிஷப் பண்ட் அபாரம் – 5ம் நாள் உணவு இடைவேளையில் இந்தியா 206/3

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி தேர்வில் 5-ம் நாள் உணவு இடைவேளையில் இந்திய அணி 3 மட்டையிலக்குடுகளை இழந்து 206 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

சிட்னி:

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது சோதனை போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. 

முதலில் மட்டையாட்டம் செய்த ஆஸ்திரேலிய அணி புகோவ்ஸ்கி, லபுஸ்சேன், ஸ்மித் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 105.4 சுற்றில் 338 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியின் புகோல்ஸ்கி 62 ரன், லபுஸ்சேன் 91 ரன், ஸ்மித் 131 ஓட்டத்தை எடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்தியா சார்பில் ஜடேஜா 4 மட்டையிலக்குடு, பும்ரா, சைனி தலா 2 மட்டையிலக்குடுகளும், சிராஜ் ஒரு மட்டையிலக்குடையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் பந்துவீச்சு சுற்றில் 244 ரன்களுக்கு அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்டானது. சுப்மான் கில், புஜாரா ஆகியோர் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து அவுட்டாகினர்.

ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 4 மட்டையிலக்குடும்,  ஹசில்வுட் 2 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

இதையடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அணி இரண்டாவது பந்துவீச்சு சுற்றில் 6 மட்டையிலக்குடுக்கு 312 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. க்ரீன் 84 ரன்னும், ஸ்மித் 81 ரன்னும், லபுசேன் 73 ரன்னும் எடுத்தனர். இந்தியா வெற்றி பெற 407 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.  

இந்தியா சார்பில் ரோகித் சர்மா, சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினர். முதல் மட்டையிலக்குடுக்கு 71 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் சுப்மன் கில் 31 ஓட்டத்தில் வெளியேறினார்.

பொறுப்புடன் ஆடிய ரோகித் சர்மா அரை சதமடித்தார். அவர் 52 ஓட்டத்தில் அவுட்டானார்.  அடுத்து இறங்கிய ரகானே 4 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். 

ஒருபுறம் மட்டையிலக்குடுகள் வீழ்ந்தாலும் புஜாரா நிதானமாக ஆடினார். அவருடன் இணைந்த ரிஷப் பண்ட் முதலில் பொறுமையாக ஆடினார். நேரம் போக போக அதிரடியை காண்பித்தார். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரியுமாக விளாசி அரை சதமடித்து அசத்தினார்.

ஐந்தாம் நாள் உணவு இடைவேளையில் இந்தியா 3 மட்டையிலக்குடுக்கு 206 ஓட்டங்கள் எடுத்துள்ளது. புஜாரா 41 ரன்னுடனும், ரிஷப் பண்ட் 73 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா வெற்றி பெற இன்னும் 201 ஓட்டங்கள் தேவைப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »