Press "Enter" to skip to content

மோசமான உதாரணத்தால் ஏமாற்றம்: இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்கிறார் டிம் பெய்ன்

நடுவர் மட்டையிலக்கு கொடுக்க மறுத்ததால், கடுமையான வார்த்தைகளால் திட்டி மோசமான உதாரணத்தை ஏற்படுத்திவிட்டேன் என டிம் பெய்ன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 3-வது சோதனை கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்றது.  இந்த போட்டியின்போது புஜாராவுக்கு நடுவர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். டிஆர்எஸ் முடிவிலும் அவுட் இல்லை என வந்தது. இதனால் கோபம் அடைந்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் மோசமான வார்த்தைகளால் திட்டினார்.

இதனால் போட்டிக்கான சம்பளத்தில் 15 சதவீத அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் சஸ்பெண்டுக்கான ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

போட்டி முடிந்த பின்னர் பேசிய டிம் பெய்ன் விளையாட்டு களத்தில் மோசமான உதாரணத்தை ஏற்படுத்தியது ஏமாற்றம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிம் பெய்ன் கூறுகையில் ‘‘என்னுடைய வார்த்தைகளால் நான் மிகவும் மோசமான உதாரணத்தை ஏற்படுத்திவிட்டேன். நான் அவரை நிச்சயமாக அவமரியாதை செய்ய வேண்டும் என்று அர்த்தமல்ல. அது கொஞ்சம் காட்டமான தருணம். நான் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியது தேவை.

ஸ்டம்ப் மைக் ஆன் ஆகி இருக்கும் என்பதும், ஏராளமான குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்கும் என எனக்குத் தெரியும். நான் சிறந்த முன்உதாரணத்தை ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »