Press "Enter" to skip to content

கங்காரு வடிவிலான கேக்கை கட் செய்ய மறுத்த ரஹானே

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றியை கொண்டாடும் வகையில் கங்காரு வடிவிலான கேக்கை தயார் செய்து, அதை கட் செய்ய சொன்னபோது ரஹானே மறுத்துவிட்டார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சோதனை தொடரை இந்தியா 2-1 எனக் கைப்பற்றியது. முதல் சோதனை போட்டியில் தோல்வியடைந்த பின்னர், வீரர்கள் பலர் காயம் அடைந்த நிலையிலும் அபார வெற்றி பெற்றது. குறிப்பாக ஆஸ்திரேலியாவின் கோட்டையாக விளங்கிய பிரிஸ்பேன் மைதானத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது சிறப்பானதாக கருதப்படுகிறது.

இதனால் சொந்த நாடு திரும்பிய வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஹானே அவரது வீட்டிற்கு வந்தபோது, அவரது அப்பார்ட்மென்டில் உள்ளவர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். அப்போது பிரமாண்ட கேக்கை வெட்டி மகிழ்ச்சியை கொண்டாட நினைத்தனர். அதற்கானஇனிப்புக்கட்டி (கேக்) ஒன்று தயார் செய்திருந்தனர். அந்த கேக்கின் மீது ஆஸ்திரேலியாவின் தேசிய சின்னமான கங்காரு இருப்பதுபோல் தயார் செய்யப்பட்டிருந்ததது.

ரஹானேயிடம் அந்த கேக்கை வெட்டச் சொன்னார்கள். ஆனால், கங்காரு போன்று இருந்ததால், ராஹானே கேக்கை வெட்ட மறுத்துவிட்டார். இந்த சம்பவம் ரஹானே சிறந்த குணத்தை காட்டியது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »