Press "Enter" to skip to content

காலே தேர்வில் ஜோ ரூட் அபாரம் – 3ம் நாள் முடிவில் இங்கிலாந்து 339/9

ஜோ ரூட்டின் சிறப்பான சதத்தால் காலே சோதனை போட்டியின் மூன்றாம் நாளில் இங்கிலாந்து அணி 9 மட்டையிலக்கு இழப்புக்கு 339 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

காலே:

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது சோதனை கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இலங்கை மட்டையாட்டம் தேர்வு செய்தது. திரிமானே 43 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் தினேஷ் சண்டிமால் அரை சதமடித்து 52 ஓட்டத்தில் வெளியேறினார். 

மேத்யூஸ் பொறுப்புடன் விளையாடி சதமடித்து 110 ஓட்டத்தில் அவுட்டானார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 92 ஓட்டத்தில் டிக்வெல்லா ஆட்டமிழந்தார். தில்ருவான் 67 ஓட்டங்கள் அடித்து வெளியேறினார்.

இறுதியில், இலங்கை அணி தனது முதல் பந்துவீச்சு சுற்றில் 139.3 சுற்றில் 381 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன்6 மட்டையிலக்குடும், மார்க் வுட் 3 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி முதல் பந்துவீச்சு சுற்றுசை தொடர்ந்தது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 2 மட்டையிலக்கு இழப்புக்கு 98 ஓட்டங்கள் எடுத்தது. பேர்ஸ்டோவ் 24 ரன்னுடனும், ஜோ ரூட் 67 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. பேர்ஸ்டோவ் 26 ஓட்டத்தில் வெளியேறினார். டேனியல் லாரன்ஸ் 3 ஓட்டத்தில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஜோஸ் பட்லர் அரை சதமடித்து 55 ஓட்டத்தில் வெளியேறினார்.

முதல் போட்டியில் இரட்டை சதம் அடித்த ஜோ ரூட் இந்த போட்டியிலும் அபாரமாக விளையாடினார்.

சாம் கரன் 12 ரன்னிலும், டொம்னிக் பெஸ் 32 ரன்னிலும், மார்க் வுட் 1 ரன்னிலும் அவுட்டாகினர். கடைசியில் நிதானமாக ஆடிய ஜோ ரூட் 186 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.

மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 9 மட்டையிலக்கு இழப்புக்கு 339 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இலங்கை அணி சார்பில் லசித் எம்புல்டெனியா 7 மட்டையிலக்கு வீழ்த்தி அசத்தினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »