Press "Enter" to skip to content

தமிழக கூடைப்பந்து வீராங்கனை அனிதா உள்பட 7 விளையாட்டு பிரபலங்களுக்கு பத்மஸ்ரீ விருது

இந்திய பெண்கள் கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், தமிழகத்தை சேர்ந்த தலைசிறந்த வீராங்கனையுமான பி.அனிதா பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகி இருக்கிறார்.

புதுடெல்லி:

இந்த ஆண்டுக்கான பத்ம விருது பெறுபவர்களின் பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. இதில் பத்மஸ்ரீ விருதுக்கு 7 விளையாட்டு பிரபலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய பெண்கள் கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், தமிழகத்தை சேர்ந்த தலைசிறந்த வீராங்கனையுமான பி.அனிதா இந்த விருதுக்கு தேர்வாகி இருக்கிறார்.

சென்னையில் வசித்து வரும் 35 வயதான அனிதா தெற்குதொடர்வண்டித் துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இதேபோல் முன்னணி டேபிள் டென்னிஸ் வீராங்கனை மவுமா தாஸ், தடகள வீராங்கனை சுதாசிங், மலையேறுதல் வீராங்கனை அன்சு ஜாம்சென்யா, மல்யுத்த வீரர் வீரேந்தர் சிங், மாற்று திறனாளி வீரர் கே.ஒய். வெங்கடேஷ், பி.டி. உஷாவின் முன்னாள் பயிற்சியாளர் மாதவன் நம்பியார் ஆகியோரும் பத்மஸ்ரீ விருதை பெறுகின்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »