Press "Enter" to skip to content

மன் கி பாத் நிகழ்ச்சியில் இந்திய அணியை பாராட்டிய பிரதமர் – நன்றி தெரிவித்த கங்குலி, ரவிசாஸ்திரி

ஆஸ்திரேலிய தொடரில் வரலாற்று வெற்றியைப் பெற்ற இந்திய அணியை பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பாராட்டி பேசியதற்கு பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி நன்றி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அகில இந்திய வானொலியில் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியில் பேசுவது வழக்கம். 

அந்தவகையில் நேற்று நடந்த மன் கி பாத் நிகழ்ச்சியில், ஆஸ்திரேலிய தொடரில் வரலாற்று வெற்றியைப் பெற்ற இந்திய அணியின் வெற்றி குறித்து பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், ஜனவரி மாதம் இந்திய கிரிக்கெட் ஆடுகளத்தில் இருந்து நல்ல செய்தி கிடைத்தது. தொடக்கத்தில் சரிவு காணப்பட்டாலும், இந்திய அணி உற்சாகமாக மீண்டு எழுந்து, ஆஸ்திரேலியாவில் சோதனை தொடரை வென்றது. நம்முடைய அணியின் கடின உழைப்பு, கூட்டு உழைப்பு உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருக்கிறது எனப் பாராட்டியிருந்தார்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய தொடரில் வரலாற்று வெற்றியைப் பெற்ற இந்திய அணியை பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பாராட்டியதற்கு பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சவுரவ் கங்குலி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஆஸ்திரேலியாவில் வெற்றிப் பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடியின் ஊக்கமளிக்கும், உத்வேகம் அளிக்கும் வார்த்தைகளுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

இதேபோல், இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நன்றி ஐயா. உங்களது அன்பான வார்த்தைகள் இந்திய அணியையும், கடினமான சூழலில் செயல்படுவதற்கான உறுதித் தன்மையையும் மேலும் பலப்படுத்தும். ஜெய்ஹிந்த் என பதிவிட்டுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »