Press "Enter" to skip to content

பிக் பாஷ் லீக் – சிட்னி தண்டரை வீழ்த்தி சேலஞ்சர் சுற்றுக்கு முன்னேறியது பிரிஸ்பேன் ஹீட்

கன்னிபெராவில் நடந்த பிக் பாஷ் லீக் போட்டியில் சிட்னி தண்டர் அணியை வீழ்த்தி பிரிஸ்பேன் ஹீட் அணி சேலஞ்சர் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

கன்னிபெரா:

பிக் பாஷ் லீக் போட்டியின் நாக் அவுட் சுற்று கன்னிபெரா மைதானத்தில் நடைபெற்றது. இதில் சிட்னி தண்டர், பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின. டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து சிட்னி தண்டர் அணி களமிறங்கியது. அந்த அணியின் பில்லிங்ஸ், கட்டிங் ஆகியோர் தலா 34 ரன்னும், தொடக்க ஆட்டக்காரார் கவாஜா 28 ரன்னும், பெர்குசன் 25 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில், சிட்னி தண்டர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 சுற்றில் 8 மட்டையிலக்குடுக்கு 158 ஓட்டங்கள் எடுத்தது.

இதையடுத்து 159 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பிரிஸ்பேன் ஹீட் ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள்

ஜோ டென்லி டக் அவுட்டாகி ஏமாற்றினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் லின் 10 ஓட்டத்தில் வெளியேறினார். அடுத்து இறங்கிய லாபஸ்சாக்னே 32 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து இறங்கிய சாம் ஹீஸ்லெட்டும் ஜிம்மி பியர்சன் அதிரடியாக ஆடினர். ஹீஸ்லெட் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து அதிரடி காட்டினார்.

இறுதியில், பிரிஸ்பேன் ஹீட் அணி 19.1 சுற்றில் 3 மட்டையிலக்குடுக்கு 162 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. அத்துடன் சேலஞ்சர் சுற்றுக்கும் முன்னேறியது. ஹீஸ்லெட் 74 ரன்னுடனும், பியர்சன் 43 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

பிக் பாஷ் லீக் போட்டியின் சேலஞ்சர் போட்டி பிப்ரவரி 4-ம் தேதி நடைபெறுகிறது. அதில் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது பிரிஸ்பேன் ஹீட் அணி. இதில் வெற்றி பெறும் அணி பிப்ரவரி 6-ல் நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணியை சந்திக்கிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »