Press "Enter" to skip to content

விளம்பர வருவாய் மூலம் விராட் கோலி ரூ.1737 கோடி சம்பாதித்து முதலிடம்

விளம்பர வருவாய் மூலம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ரூ.1737 கோடி சம்பாதித்து முதல் இடத்தில் உள்ளார்.

மும்பை:

இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான (சோதனை, ஒருநாள் ஆட்டம் மற்றும் 20 ஓவர்) போட்டிக்கும் கேப்டனாக விராட் கோலி உள்ளார். 3 வடிவிலும் அவர் சிறப்பான மட்டையாட்டம்கை வெளிப்படுத்தி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார்.

விராட் கோலி கிரிக்கெட் மட்டுமல்லாமல் விளம்பரங்கள் மூலமும் கோடி கணக்கில் பணம் சம்பாதிக்கிறார். இந்திய பிரபலங்களில் அவர் மதிப்பு மிக்கவராக இருக்கிறார்.

இதனால் விளம்பர நிறுவனங்கள் அவரை போட்டி போட்டுக்கொண்டு ஒப்பந்தம் செய்து வருகிறார்கள். 30-க்கும் மேற்பட்ட விளம்பர நிறுவனங்கள் அவர் கைவசம் இருக்கிறது.

இந்த நிலையில் 2020-ம் ஆண்டுக்கான இந்திய பிரபலங்களில் மதிப்புமிக்கவர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி விளம்பர வருமானம் மூலம் விராட் கோலி ரூ.1737 கோடி சம்பாதித்து முதல் இடத்தில் உள்ளார்.

பாலிவுட் பிரபலங்கள் எல்லோரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு அவர் தொடர்ந்து 4-வது ஆண்டாக முதல் இடத்தில் உள்ளார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட இந்திய அணி முன்னாள் கேப்டன் டோனி 2 இடங்கள் பின்தங்கி உள்ளார். அவர் விளம்பரங்கள் மூலம் ரூ.262 கோடி சம்பாதித்துள்ளார்.

அமீர்கான், ரன்பீர் கபூர், பிரியங்கா சோப்ரா ஆகியோரை விட டோனி முன்னிலையில் உள்ளார்.

அக்‌ஷய் குமார் விளம்பரங்கள் மூலம் ரூ.860 கோடி சம்பாதித்து 2-வது இடத்தில் உள்ளார். ரன்வீர் சிங் ரூ.740 கோடியுடனும், ஷாருக்கான் ரூ.371 கோடியுடனும், தீபிகா படுகோனே ரூ.364 கோடியுடனும் அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »