Press "Enter" to skip to content

சேப்பாக்கம் சோதனை: கடைசி சுற்றில் மட்டையிலக்கு வீழ்த்திய பும்ரா- முதல்நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 263/3

ஜோ ரூட் 100-வது சோதனை போட்டியில் சதம் விளாச, கடைசி சுற்றில் பும்ரா மட்டையிலக்கு வீழ்த்த இங்கிலாந்து முதல்நாள் ஆட்ட முடிவில் 3 மட்டையிலக்கு இழப்பிற்கு 263 ஓட்டங்கள் சேர்த்துள்ளது.

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் சோதனை கிரிக்கெட் போட்டி சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 13 மாதங்களுக்கு பிறகு இந்தியாவில் சர்வதேச போட்டி தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு காரணமாக இந்த போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்திய அணி 6 பேட்ஸ்மேன்கள், 2 வேகப்பந்து வீரர்கள் (பும்ரா, இஷாந்த் சர்மா), 3 சுழற்பந்து வீரர்களுடன் (அஷ்வின், வாஷிங்டன் சுந்தர், சாபாஷ் நதீம்) களம் இறங்கியது.

இலங்கைக்கு எதிரான தொடரில் இடம்பெறாத பென் ஸ்டோக்ஸ், ஜாஃப்ரா ஆர்ச்சர், ரோரி பர்ன்ஸ் ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு மீண்டும் திரும்பினார்கள்.

100-வது தேர்வில் விளையாடும் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோரூட் டாஸ் வென்று தனது அணி முதலில் மட்டையாட்டம் செய்யும் என்று அறிவித்தார். ரோரி பேர்ன்சும், சிப்லியும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இங்கிலாந்து அணி நிதானமாக ஆடியது. இதனால் 19.3 ஓவர்களில் அந்த அணி 50 ஓட்டத்தில் தொட்டது.

அந்த அணியின் தொடக்க ஜோடியை அஷ்வின் பிரித்தார். ரோரி பேர்ன்ஸ் 33 ஓட்டத்தில் அவரது பந்தில் ரி‌ஷப் பண்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 63 (23.5 ஓவர்) ஆக இருந்தது. அடுத்து வந்த லாரன்ஸ் மட்டையிலக்குடை பும்ரா எளிதில் வீழ்த்தினார். அவர் ஓட்டத்தை எதுவும் எடுக்கவில்லை. 63 ஓட்டத்தில் இங்கிலாந்து அணி 2 மட்டையிலக்குடை இழந்தது.

மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து 2 மட்டையிலக்கு இழப்புக்கு 67 ஓட்டத்தை எடுத்திருந்தது. சிப்லி 26 ரன்னுடனும், ஜோரூட் 4 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. சிப்லி, ஜோ ரூட் அபாரமாக விளையாடினர்.  இவர்கள் இருவரையும் பிரிக்க இந்தியாவின் ஐந்து பந்து வீச்சாளர்களும் திணறினார்கள்.

டாம் சிப்லி 159 பந்தில் அரைசதம் அடித்தார். இருவரும் 2-வது செசன் முழுவதும் மட்டையிலக்கு இழக்காமல் பார்த்துக் கொண்டனர். தேனீர் இடைவேளையின்போது இங்கிலாந்து 2 மட்டையிலக்கு இழப்பிற்கு 140 ஓட்டங்கள் எடுத்திருந்தது. டாம் சிப்லி 53 ரன்களுடனும், ஜோ ரூட் 45 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ஜோ ரூட் 110 பந்தில் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த பின் ஜோ ரூட் ஆட்டத்தில் வேகத்தை கூட்டினார். இதனால் இங்கிலாந்து அணியின் ஓட்டத்தை விகிதம் உயர ஆரம்பித்தது.

ஜோரூ ரூட் சிறப்பாக விளையாடி டாம் சிப்லி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜோ ரூட் 164 பந்தில் சதம் அடித்தார். 51 ஓட்டத்தில் இருந்து 100 ஓட்டத்தில்த்தொட ஜோ ரூட்டுக்கு 54 பந்துகளே தேவைப்பட்டது. 100-வது போட்டியில் சதம் அடித்து ஜோ ரூட் அசத்தினார்.

80 சுற்றுகள் முடிந்து புதிய பந்தை எடுத்த பின்னரும், இந்திய பந்து வீச்சாளர்களால் நெருக்கடி கொடுக்கமுடியவில்லை.

கடைசி ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை யார்க்கராக வீசினார். பேட்டால் எதிர்கொள்ள முடியாமல் போனதால் டாம் சிப்லி எல்.பி.டபிள்யூ ஆனார். அவர் 286 பந்தில் 87 ஓட்டங்கள் அடித்தார். டாம் சிப்லி – ஜோ ரூட் ஜோடி 3-வது மட்டையிலக்குடுக்கு 200 ஓட்டங்கள் குவித்தது.

டாம் சிப்லி ஆட்டமிழந்ததுடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஜோ ரூட் 128 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்திய அணி தரப்பில் பும்ரா 2 மட்டையிலக்குடும், அஷ்வின் ஒரு மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »