Press "Enter" to skip to content

2வது டி20 கிரிக்கெட் – பாகிஸ்தானை 6 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா

லாகூரில் நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 6 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா.

லாகூர்:

பாகிஸ்தான் – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி லாகூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் மட்டையாட்டம் செய்த பாகிஸ்தான் மட்டையிலக்கு கீப்பர் ரிஸ்வான் அரை சதம் (51 ரன்) அடித்து ஆட்டமிழந்தார். பஹிம் அஷ்ரப் 30 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இறுதியில், பாகிஸ்தான் அணி20 ஓவர் முடிவில் 7 மட்டையிலக்கு இழப்பிற்கு 144 ஓட்டங்கள் சேர்த்தது.

தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் பிரிடோரியஸ் அசத்தலாக பந்து வீசி 5 மட்டையிலக்கு வீழ்த்தினார்.

இதையடுத்து, 145 ஓட்டங்கள் அடித்தல் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. தொடக்க வீரர் ரீஸா ஹென்ரிக்ஸ், வான் பிஜியன் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹென்ரிக்ஸ் மற்றும் வான் பிஜியன் தலா 42 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில், தென்ஆப்பிரிக்கா அணி 16.2 சுற்றில் 4 மட்டையிலக்குடுக்கு 145 ஓட்டங்கள் எடுத்து 6 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மில்லர் 25 ரன்னும், கிளாசன் 17 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.

தென் ஆப்பிரிக்கா அணியின் பிரிடோரியஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
 
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது. தொடரின் வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி 14-ம் தேதி நடைபெற உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »