Press "Enter" to skip to content

சோதனை போட்டிகளில் இருந்து டு பிளெசிஸ் ஓய்வு- காரணம் இதுதான்

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டு பிளெசிஸ், சோதனை போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டு பிளெசிஸ், தென் ஆப்பிரிக்க அணிக்காக 69 சோதனை போட்டிகளில் விளையாடி 4163 ஓட்டங்கள் (சராசரி 40.02) அடித்துள்ளார். சர்வதேச சோதனை போட்டிகளில் மொத்தம் 10 சதம் அடித்துள்ளார். அதிகபட்சமாக 2020ம் ஆண்டு 199 ஓட்டங்கள் அடித்ததே ஒரு பந்துவீச்சு சுற்றில் இவரது அதிகபட்ச ஓட்டத்தை ஆகும். 

இந்நிலையில் சர்வதேச சோதனை போட்டிகளில் இருந்து விலகுவதாக டு பிளெசிஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

என் மனம் தெளிவாக உள்ளது. புதிய அத்தியாயத்திற்குள் செல்வதறகு இதுவே சரியான தருணம். அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் எனது நாட்டிற்காக விளையாடுவது ஒரு கவுரவம். ஆனால் சோதனை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. 

அடுத்த இரண்டு ஆண்டுகள் ஐ.சி.சி டி20 உலகக் கோப்பை ஆண்டுகள் ஆகும். இதன் காரணமாக, எனது கவனம் இந்த குறுகியகால போட்டிக்கு மாறுகிறது. மேலும் உலகம் முழுவதும் முடிந்தவரை இந்த போட்டிகளில் விளையாட விரும்புகிறேன். இதனால் நான் சிறந்த வீரராக இருக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

2012ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த சோதனை போட்டியில் அறிமுகமான பிளெசிஸ், முதல் போட்டியிலேயே சர்வதேச கவனம் பெற்றார். முதல் பந்துவீச்சு சுற்றில் 78 ஓட்டங்கள், இரண்டாவது பந்துவீச்சு சுற்றில் சதம் அடித்தது மறக்க முடியாத போட்டியாக அமைந்தது. இந்த மாத துவக்கத்தில் ராவல்பிண்டி மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான சோதனை போட்டியில் விளையாடியதே இவரது கடைசி சோதனை போட்டி ஆகும்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »