Press "Enter" to skip to content

இஷான் கிஷன் சரவெடி: 94 பந்தில் 173 ஓட்டத்தை குவிப்பு, ஏழு கேட்ச்- ஜார்க்கண்ட் 324 ஓட்டத்தில் வெற்றி

விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஜார்க்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷன் அபாரமாக விளையாடி 94 பந்தில் 173 ஓட்டங்கள் குவித்தார்.

இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி இன்று நடைபெற்றது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜார்க்கண்ட்- மத்திய பிரதேச அணிகள் மோதின. மத்திய பிரதேச அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

ஜார்க்கண்ட் அணியின் கேப்டனும், மட்டையிலக்கு கீப்பருமான இஷான் கிஷன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பந்துகளை மைதானத்தின் அனைத்து திசைகளுக்கும் விரட்டி பவுண்டரி, சிக்சர் விரட்டி மத்திய பிரதேச பவுலர்களை திக்குமுக்காடச் செய்தார்.

இறுதியாக0 94 பந்தில் 19 பவுண்டரி, 11 சிக்சருடன் 173 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். விராட் சிங் 49 பந்தில் 68 ரன்களும், சுமித் குமார் 58 பந்ததில் 52 ரன்களும், அனுகுல் ராய் 39 பந்தில் 72 ரன்களும் விளாச ஜார்க்கண்ட் 50 சுற்றில் 9 மட்டையிலக்கு இழப்பிற்கு 422 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் 423 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் மத்திய பிரதேச அணி களம் இறங்கியது. பந்து வீச்சில் சொதப்பிய அந்த மட்டையாட்டம்கிலும் சொதப்பியது. தொடக்க வீரர் அபிஷேக் பண்டாரி 42 ரன்களும், வெங்கடேஷ் அய்யர் 23 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றையிலக்க ஓட்டத்தில் ஆட்டமிழக்க மத்திய பிரதேச அணி 98 ஓட்டத்தில் சுருண்டது. அந்த அணியால் 18.4 சுற்றுகள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது. இதனால் ஜார்க்கண்ட் 324 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  மட்டையாட்டம்கில் அசத்திய இஷான் கிஷன் மட்டையிலக்கு கீப்பர் பணியில் ஏழு கேட்ச் பிடித்து அசத்தினார். 

ஜார்க்கண்ட் அணியில் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் 6 மட்டையிலக்கு வீழ்த்தினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »