Press "Enter" to skip to content

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 சுற்றிப் போட்டியில் 4 ஓட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது 20 சுற்றிப் போட்டியில் நியூசிலாந்து அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டுனிடின்:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஐந்து 20 சுற்றிப் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்று உள்ளது.

இரு அணிகள் இடையே கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து 53 ஓட்டத்தை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதிய 2-வது 20 சுற்றிப் போட்டி டுனிடினில் இன்று நடந்தது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 சுற்றில் 7 மட்டையிலக்கு இழப்புக்கு 219 ஓட்டத்தை எடுத்தது.

தொடக்க வீரர் கப்திலின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 50 பந்தில் 97 ஓட்டத்தை எடுத்தார். இதில் 6 பவுண்டரிகளும், 8 சிக்சரும் அடங்கும். கேப்டன் வில்லியம்சன் 35 பந்தில் 53 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்), ஜேம்ஸ் நீசம் 16 பந்தில் 45 ரன்னும் (1 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தனர்.

220 ஓட்டத்தை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி பின்னர் களம் இறங்கி விளையாடியது.  20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 215 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்டேய்னிஸ் 37 பந்தில் 78 ஓட்டங்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரியும் 5 சிக்சரும் அடங்கும். கடைசி சுற்றில் 15 ஓட்டங்கள் எடுத்தால் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெறலாம் என்ற நிலையில் 10 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் ஐந்து 20 சுற்றிப் போட்டி கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »