Press "Enter" to skip to content

அகமதாபாத் ஆடுகளம் குறித்த விமர்சனம்: நாதன் லயன் என்ன சொல்கிறார்

அகமதாபாத் ஆடுகளம் குறித்து விமர்சனம் செய்ய உரிமை இல்லை என்று ஆஸ்திரேலியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது சோதனை கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் அமகதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. 2 நாட்களிலேயே போட்டி முடிவடைந்தது. 30 மட்டையிலக்குடுகளில் சுழற்பந்து வீச்சாளர்கள் 28-ஐ கைப்பற்றினர்.

இதனால் ஆடுகளம் குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன், ஆடுகளம் குறித்து விமர்சனம் செய்ய உரிமை இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாதன் லயன் கூறுகையில் ‘‘நாம் உலகளின் பல இடங்களில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாடி 47 அல்லது 60 ஓட்டங்களில் எதிரணியை ஆட்டமிக்கச் செய்துள்ளோம். யாரும் ஆடுகளம் குறித்து பேசவில்லை. ஆனால், பந்து முதல் நாளில் இருந்து சுழன்றால் இதுகுறித்து விமர்சனம் செய்யவதை உலகளவில் பார்க்க முடிகிறது. எனக்கு அதுபோன்று வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்காக இருக்கிறேன். அது மிகப்பெரிய வேடிக்கையாக இருக்கும்.

நான் போட்டியை இரவு முழுவதும் உட்கார்ந்து பார்த்தேன். மிகவும் சிறப்பாக இருந்தது. சிட்னி ஆடுகள பராமரிப்பாளரும் இது போன்று உருவாக்க வேண்டும் என நினைக்கிறேன். இங்கிலாந்து நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியதை கடந்து செல்கிறோம். இதைவிட என்ன சொல்வது?’’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »