Press "Enter" to skip to content

மும்பை இந்தியன்ஸ் அணியின் மட்டையிலக்கு கீப்பிங் ஆலோசகர் கிரண்மோரே கொரோனாவால் பாதிப்பு

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந் தேதி முதல் மே 30-ந் தேதி வரை சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஆமதாபாத் ஆகிய நகரங்களில் நடக்கிறது.

மும்பை:

மும்பை இந்தியன்ஸ் அணியின் மட்டையிலக்கு கீப்பிங் ஆலோசரும், முன்னாள் வீரருமான கிரண்மோரே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந் தேதி முதல் மே 30-ந் தேதி வரை சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஆமதாபாத் ஆகிய நகரங்களில் நடக்கிறது.

ஐ.பி.எல். போட்டிக்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து வரும் வேளையில் இந்த போட்டிக்காக தயாராகி வரும் வீரர்கள் மற்றும் மைதான ஊழியர்கள், இந்திய கிரிக்கெட் வாரிய பணியாளர்களை கொரோனா தாக்கி வருகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்ஸ்மேன் நிதிஷ் ராணா, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் அக்‌ஷர் பட்டேல், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் ஆகியோர் கொரோனா தொற்றுக்கு ஆளானார்கள். இதில் இருந்து மீண்டு இருக்கும் நிதிஷ் ராணா அணியினருடன் இணைந்து பயிற்சியை தொடங்கி விட்டார். மற்ற இரு வீரர்கள் தங்களை தனிமைப்படுத்தி சிகிச்சை எடுத்து வருகிறார்கள்.

இதற்கிடையே போட்டி நடைபெறும் மைதானங்களில் ஒன்றான மும்பை வான்கடே ஸ்டேடியத்தின் ஊழியர்கள் 10 பேர் ஏற்கனவே கொரோனா பாதிப்பை சந்தித்து தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் அந்த மைதான பணியாளர்களில் மேலும் 3 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனை முடிவில் நேற்று தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் மட்டையிலக்கு கீப்பரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் மட்டையிலக்கு கீப்பிங் மற்றும் இளம் வீரர்களின் திறமையை கண்டறியும் குழுவின் ஆலோசகருமான 58 வயது கிரண்மோரே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அறிகுறி எதுவும் இல்லாத நிலையில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கும் கிரண்மோரே தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சுகாதார வழிகாட்டுதல்கள் அனைத்தையும் மும்பை இந்தியன்ஸ் அணியும், கிரண்மோரேவும் பின்பற்றி வருகின்றனர் என்றும் மருத்துவ குழுவினர் கிரண்மோரேவின் உடல் நலனை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றும் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் மும்பையில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த 10 லீக் ஆட்டங்கள் நடைபெறுமா? என்ற கேள்விக்குறி எழுந்தது. ஆனால் ஐ.பி.எல். போட்டியை மும்பையில் கட்டுப்பாடுகளுடன் நடத்த மராட்டிய மாநில அரசு அனுமதி அளித்து இருப்பதால் இந்த போட்டிக்கு இருந்து வந்த சிக்கல் தீர்ந்துள்ளது.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »